கலைஞரின் நினைவாகப் பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசுஅனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும்தி.மு.க.வின்முன்னாள் தலைவருமான கலைஞருக்கு134 அடி உயரத்தில், கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கத்தமிழக அரசு முடிவு செய்திருந்தது. அதனைத்தொடர்ந்து பல்வேறு துறைகளிடம்அனுமதி பெறத்தமிழக அரசு விண்ணப்பித்திருந்தது. அந்த வகையில்ஏற்கனவேசுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் கழகம் சார்பில் கடலில் பேனா சிலை அமைக்க ஒப்புதல் வழங்கி இருந்தது.
அதனைத்தொடர்ந்து தற்போது மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் சார்பில் கடலோர ஒழுங்குமுறை ஆணையமும் அனுமதி வழங்கியுள்ளது. இந்த அனுமதியில் 15 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த அனுமதியில்ஐஎன்எஸ்அடையார் கடற்படை தளத்தில் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும். பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் போது எந்த ஒரு நிலையிலும் நிலத்தடி நீரைப் பயன்படுத்தக் கூடாது.திட்டத்தைச்செயல்படுத்தும் போது நிபுணர் குழுஅமைத்துக்கண்காணிக்க வேண்டும் உள்ளிட்ட 15 நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதையடுத்து விரைவில் பேனாநினைவுச் சின்னம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.