Advertisment

கலைஞர் பேனா நினைவுச் சின்னம்; ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம்

Kalaignar Pen Memorial; Tamil Nadu Government letter to the Union Government

கலைஞருக்கு கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க ஒப்புதல் கோரி ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு பொதுப்பணித்துறை கடிதம் எழுதியுள்ளது.

Advertisment

மறைந்த திமுக தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான கலைஞருக்கு நினைவிடம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதே நேரம், கலைஞரின் எழுத்தாற்றலைப் போற்றும் வகையில், மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள கடல் பகுதியில் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது.

Advertisment

கலைஞருக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் ஒப்புதல் வழங்கியிருந்தது. அதேபோல், பேனா நினைவுச் சின்னத்துக்கான சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை தமிழ்நாடு பொதுப் பணித்துறை, ஒன்றிய அரசின் சுற்றுச் சூழல் நிபுணர் குழுவிடம் தாக்கல் செய்திருந்தது. கலைஞர் பேனா நினைவுச் சின்னத்திற்கு கடற்கரை ஒழுங்காறு மண்டலம் அனுமதி வழங்குவது குறித்து விரைவில் முடிவெடுக்கவுள்ளது.

இந்நிலையில், பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டம் உள்ளிட்டவற்றை நடத்தி தமிழ்நாடு பொதுப் பணித்துறை சார்பில்,சென்னை மெரினாவில் கலைஞர் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்காக ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

kalaignar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe