Published on 07/08/2022 | Edited on 07/08/2022

முன்னாள் முதல்வர் கலைஞரின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கிவைத்தார். 5 கி.மீ., 10 கி.மீ., 21 கி.மீ., 42 கி.மீ. என மொத்தம் 4 பிரிவுகளில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வின் தலைமை விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு 4 பிரிவுகளிலும் முதல் 3 இடங்களை பிடித்த வீரர்களுக்கான ரொக்க பரிசுகளையும், நினைவு பரிசுகளையும் வழங்கினார். மாரத்தான் ஓட்டத்தின் பதிவுத்தொகையாக பெறப்பட்ட ரூ.1 கோடியே 20 லட்சத்து 69 ஆயிரத்து 980ஐ சுகாதாரத்துறை செயலாளரிடம் முதலமைச்சர் ஒப்படைத்தார். இந்த நிகழ்வில் முதலமைச்சரோடு, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ் ஆகிய 4 நாடுகளின் துணைத் தூதர்கள் கலந்து கொண்டார்கள்.