Kalaignar Memorial Library; Chief Minister who inspected in person!

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில், மதுரையில் 70 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, மதுரை, புது நத்தம் சாலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 2.61 ஏக்கர் நிலத்தில், 2,22,815 சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படவுள்ள இடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (29.10.2021) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Advertisment

மதுரை மாவட்டத்தில் பல்வேறு ஆய்வு பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தொன்மையைப் பறைசாற்றும் கீழடி அகழ்வாராய்ச்சி பணிகளைப் பார்வையிட்டார். தொடர்ந்து கலைஞர் நூலகம் அமையப் போகும் இடத்தைப் பார்வையிட்டார். அப்போது கட்டடத்தின் மாதிரி வரைப்படத்தை அதிகாரிகள் காண்பித்து விளக்கமளித்தனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Advertisment