Advertisment

கலைஞரின் மன்னிப்புக் கடிதம்

kalaignar letter

Advertisment

கலைஞர், தன் நண்பர்களை அதிகம் நேசித்தவர். உயர்ந்த நிலைக்குச் சென்றபோதும் நட்பை மறக்காதவர். குறிப்பாக தனது பால்யகாலத் தோழரான திருவாரூர் கு.தென்னன் மீது, அளவுகடந்த அன்பைச் சொரிந்தவர்.

கலைஞர் முதல்வராக இருந்த போது, 2008 அக்டோபரில் கலைஞரைப் பார்க்க அவரது கோபாலபுரம் வீட்டிற்கு வருகிறார் தென்னன். அப்போது ஏதோ ஒரு மூடில் அவரைக் கடிந்து கொள்கிறார் கலைஞர். தென்னன் திருவாரூருக்குக் கிளம்பிப் போய்விட்டார். அதன்பின், கலைஞர், நண்பனின் மனதைப் புண்படுத்திவிட்டோமே என்று மனம் வருந்துகிறார். அவர் மனம் நண்பனைச் சுற்றியே வட்டமடிக்கிறது. 22-ந் தேதி தலைமைச் செயலகம் வந்து தனது இருக்கையில் உட்கார்கிறார் கலைஞர். உடனே தனது லெட்டர் பேடை எடுத்து கடிதம் எழுத ஆரம்பிக்கிறார்...

*

அன்புள்ள நண்பர் தென்னனுக்கு,

நீ சென்னையில் வீட்டுக்கு வந்தபோது, அன்று என்னைக்

கப்பியிருந்த சோகத்திலும்-கோபத்திலும்

உன்னை மனம் நோகச் சொன்ன வார்த்தைகளுக்காக வருந்துகிறேன்.

வழக்கம்போல் பொறுத்துக்கொள்க.

என்றும் உன் நண்பன், முக.’ என்று மன்னிப்புக் கேட்பதுபோல் வருத்தம் தெரிவித்து எழுதி, அதில் தன் கைப்படவே தென்னனின் முகவரியையும் எழுதி அனுப்புகிறார்.

ஒரு முதல்வராக இருந்தபோதும், அதற்குரிய அதிகாரப் பெருமிதம் எதுவும் இன்றி, கலைஞரைப் போல் நட்பைக் கொண்டாடியவர் எங்கேனும் இருப்பாரா?

kalaignar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe