mottai sm

Advertisment

திமுக தலைவர் கலைஞர் உடல்நிலை சீராகி நலம் பெற வேண்டும் என காவேரி மருத்துவமனை முன்பு தொண்டர் ஒருவர் மொட்டை அடித்துக்கொண்டார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் கலைஞர் சிகிச்சை பெற்று வரும் காவேரி மருத்துவமனை முன்பு ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளனர். இந்நிலையில் மூன்று நாட்களாக மருத்துவமனை முன்பு இருக்கும் திமுக தொண்டர் வீரமணி கலைஞர் உடல்நிலை சீராகி நலம் பெற வேண்டி இன்று காலை மருத்துவமனை முன்பு மொட்டை அடித்துக்கொண்டார். கலைஞரின் குரலை மீண்டும் கேட்க வேண்டும் என ஆவலாக இருப்பதாக அவர் கூறினார்.