ggh

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கலைஞரின் உடல்நிலை குறித்து ஏராளமான தொண்டர்கள் மருத்துவமனை வளாகத்தை சுற்றிலும் எந்நேரமும் குவிந்துள்ளனர். கலைஞரின் உடல்நிலை சீராக உள்ளதாக நேற்று காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து இன்றைய நிலவரம் குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிடுக்கிறது என்று தகவல் பரவியது. இதனால் தொண்டர்கள் மருத்துவமனை முன்பு குவிந்தனர்.

இரவு 9.20 மணிக்கு மேல் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், ஆ.ராசா, பொன்முடி, கனிமொழி என்று ஒவ்வொருவராக மருத்துவமனையில் இருந்து புறப்பட்டுச்சென்றனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், ‘’கலைஞர் பூரண நலத்துடன் உள்ளார். தொண்டர்கள் அச்சப்பட தேவையில்லை. நேற்று போலவே கலைஞரின் உடல்நிலை சீராக உள்ளது. எந்த மாறுதலும் இன்றி நேற்றைய நிலையிலேயே கலைஞரின் உடல்நிலை உள்ளது’’ என்று தெரிவித்தார்.