Advertisment

கலைஞர் நினைவுநாள் - ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு திமுக உதவி

DMK

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழூர்-கிழக்கு ஒன்றியத்தில்இன்று (7-8-2020) காலை கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு, ஒன்றிய கழக செயலாளர் க.சொ.க.கண்ணன் அவர்கள் தலைமையில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

Advertisment

அதனை தொடர்ந்து தா.பழூர் அரசு முதன்மை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா பணியினை சிறப்பாக மேற்கொள்ளும் டாக்டர். புகழேந்தி, கரோனா பணியினை மேற்கொண்டு பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டு வந்துள்ள கொரோனா போராளிகள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் காமராஜ், செவிலியர்கள் மெர்சி, நிஷா ஆகியோருக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

Advertisment

மேலும் மருத்துவமணைக்கு தேவையான கபசுரக்குடிநீர் கேன்கள், போர்வைகள், டெட்டால், பிளீச்சிங் பவுடர் மூட்டைகள், சுண்ணாம்பு மூட்டைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பொதுக்குழு உறுப்பினர் இரா.அண்ணாதுரை, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் என்.ஆர்.இராமதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர்.தட்சணாமூர்த்தி, டாக்டர் வெங்கடேசன், டாக்டர்.மாலதிகண்ணன், ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள் எஸ்.சூசைராஜ், எஸ்.ஆர்.தமிழ்செல்வன், த.நாகராசன், அ.எழிலரசி, மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் கோவி.சீனிவாசன், இரா.சங்கர், சி.கண்ணதாசன், ஒன்றிய அணி அமைப்பாளர்கள் ந.கார்த்திகைகுமரன், க.சேகர், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் த.குணசீலன் மற்றும் ஊராட்சி, வார்டு கழக செயலாளர்கள், கழக முன்னோடிகள் கலந்துகொண்டனர்.

kalaignar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe