மறைந்த திமுக தலைவர் கலைஞரின் இறப்பு சான்றிதழை சென்னை மாநகராட்சி அளித்துள்ளது.
திமுக தலைவர் கலைஞர் நேற்று முன்தினம் காலமானார். அதனைத் தொடர்ந்து அவரது உடல் நேற்று காலை முதல் ராஜாஜி அரங்கில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் படைசூழ அவரின் உடல் இறுதி ஊர்வலமாக அண்ணா நினைவிடம் கொண்டு செல்லப்பட்டு, 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் கலைஞரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இதனைத்தொடர்ந்து நேற்று இரவு முதல் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலைஞர் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று கண்ணீருடன் மலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கோபாலபுரம் விலாசமிட்டு கலைஞரின் இறப்பு சான்றிதழை சென்னை மாநகராட்சி அளித்துள்ளது. இந்த சான்றிதழ் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், கலைஞரின் வயது 94 என குறிப்பிடப்பட்டுள்ளது. கலைஞரின் தாயார் அஞ்சுகத்தின் பெயர் முதலிலும், தந்தை முத்துவேல் பெயர் இரண்டாவதாகவும், மனைவி தயாளு அம்மாள் பெயர் மூன்றாவதாகவும் இறப்பு சான்றிதழில் இடம்பெற்றுள்ளன.