Advertisment

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை; மருத்துவ முகாமை துவக்கி வைத்த அமைச்சர் (படங்கள்)

சென்னை கிண்டியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை ஜூன் 15 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. 240 கோடி ரூபாய் மதிப்பில் இந்த மருத்துவமனையானது ஆயிரம் படுக்கைகள் கொண்ட வசதிகளுடன் உயர் சிறப்பு மருத்துவமனையாக அமைந்துள்ளது. தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் 3 கட்டடங்களைக் கொண்ட 52,428 ச.மீ. பரப்பளவுடன் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிறுநீரகவியல், இருதயவில், நரம்பியல், மயக்கவியல் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட துறைகள் செயல்படவுள்ளன.

Advertisment

249 ரெகுலர் மற்றும் 508 அவுட்சோர்சிங் எனப்படும் ஒப்பந்த அடிப்படை என மொத்தம் 757 பணியாளர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். மருந்தாளுநர்கள், செவிலியர்கள், உளவியல் நிபுணர்கள் இந்த மருத்துவமனையில் பணியமர்த்தப்பட இருக்கிறார்கள். 60 செவிலியர்கள், 30 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

Advertisment

இந்நிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சி இணைந்து கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு சிறப்பு மருத்துவம் முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் துவக்கி வைத்து பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் சுகாதாரத் துறை செயலாளர் ககன் தீப்சிங் பேடி மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், தேசிய சுகாதாரத்துறை நிர்வாக இயக்குநர் ஷில்பா பிரபாகர், தியாகராயநகர் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, மைலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் தா.வேலு உள்ளிட்டவர்கள் இந்த முகாமையில் கலந்து கொண்டனர்.

ma.subramanian
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe