Advertisment

திருவண்ணாமலையில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா!

Kalaignar centenary celebration held in Tiruvannamalai

Advertisment

கலைஞர் நூற்றாண்டு நிறைவையொட்டி முப்பெரும் விழா திருவண்ணாமலை ஸ்ரீஅபிராமி மஹாலில் நடந்தது. இதில் புலவர் மாமணி வெ.அனந்தசயனம் எழுதிய ‘கலைஞர் என் காதலன்’ என்ற கவிதை நூல் வெளியிடப்பட்டது. இது புலவரால், வெண்பா , கலிப்பா, வெண்கலிப்பா , ஆசிரியப்பா , விருத்தப்பா , சந்தப்பா என பல்வேறு வகையிலான 100 பாடல்களால் இயற்றப்பட்ட நூல் என்பது குறிப்பிடத்தக்கது. இதை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வெளியிட, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் பெற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், மாதவ சின்ராசுவுக்கு சடையப்ப வள்ளல் விருதும், வழக்கறிஞர் செ.அருணுக்கு தந்தை பெரியார் விருதும், புலவர் அ.மோகனனுக்கு பேரறிஞர் அண்ணா விருதும், கவிச்சுடர் ஆரூர் தமிழ்நாடனுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் விருதும் வழங்கப்பட்டது. முன்னதாக இந்த நிகழ்ச்சியில், கவிச்சுடர் புதுக்கோட்டை கவிதைப்பித்தன் தலைமையில் சிறப்புக் கவியரங்கம் நடந்தது. இதில், கவிஞர்கள் செல்வ மீனாட்சிசுந்தரம், கருமலை தமிழாழன், இராமதாசுகாந்தி, வள்ளிமுத்து, மகாலட்சுமி, அல்லி, பாக்கியலட்சுமி ஆகியோர் கவிதை பாடினர். மேலும் 100 கவிஞர்களுக்கு தமிழன்னை விருதும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் க.வேங்கடபதி, பாவலர்கள் அன்புச்செல்வம், சிதை வாசன், அருள்செல்வம், புதுசேரி பொ.முருகன், சேலம் முனைவர் ரம்மத்பீபி. பேராசிரியர் ஜெயலாபதி, ஆரூர் பேராசிரியர் இளையராஜா, த.இலக்கியன், ப.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியை கவிச்சிகரம் தமிழமுதன் தொகுத்து வழங்கினார்.

function Kalaignar100 kalaignar thiruvannamalai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe