anna

திமுக தலைவர் கலைஞரின் உடல் அறிஞர் அண்ணா அணிவித்த மோதிரத்துடனே அடக்கம் செய்யப்பட்டது.

Advertisment

திமுக தலைவர் கலைஞர் நேற்று முன்தினம் காலமானார். அதனைத் தொடர்ந்து அவரது உடல் நேற்று காலை முதல் ராஜாஜி அரங்கில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் படைசூழ அவரின் உடல் இறுதி ஊர்வலமாக அண்ணா நினைவிடம் கொண்டு செல்லப்பட்டு, 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் கலைஞரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது அவரது விரலில் எப்போதும் அணிந்திருக்கும் மோதிரத்துடனே அவர் அடக்கம் செய்யப்பட்டார்.

Advertisment

annas

1959-ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநகராட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற்று மேயர் பதவியை கைப்பற்றியது. திமுகவின் இந்த வெற்றிக்காக கடுமையாக உழைத்தவர் எனது தம்பி கலைஞர் என கலைஞருக்கு அண்ணா தங்க மோதிரம் ஒன்றை பரிசாக அணிவித்தார். அண்ணா அணிவித்ததால் அந்த மோதிரத்தை கலைஞர் இதுவரை கழட்டியதில்லை.

kalai

ஒரு முறை கலைஞர் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது மருத்துவர்கள் அவர் அணிந்திருந்த மோதிரத்தை கழட்ட வேண்டும் என கலைஞரிடம் கூறியுள்ளார். ஆனால் கலைஞர் அதனை கழட்ட மறுப்பு தெரிவித்துள்ளார். அப்படி அண்ணா அளித்த அந்த மோதிரம் கலைஞரின் உடலோடு ஒன்றாகிவிட்டது.

Advertisment

இதனால், கலைஞர் விரலில் உள்ள அந்த மோதிரம் அவர் உடல் அடக்கம் செய்யப்படும்போதும் கழட்டப்படாமல், மோதிரத்துடனே அடக்கம் செய்யப்பட்டது.