kalaignar birthday tamilnadu government sweet pongal go passed

Advertisment

திமுகவின் முன்னாள் தலைவரும்தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா வரும் ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல்தமிழக அரசு சார்பிலும்திமுக சார்பிலும் வெகு விமர்சையாக கொண்டாட பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறையின் கீழ் சத்துணவுத் திட்டத்தில் பயனடைந்து வரும் குழந்தைகளுக்கு தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின்பிறந்தநாள் அன்று சர்க்கரைபொங்கல் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதே போன்று இனி வரும் காலங்களில் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்த நாளன்றும் (ஜூன் 3 ஆம் தேதி) குழந்தைகளுக்கு சர்க்கரைபொங்கல் வழங்கப்படும் என கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் தற்போது தமிழக அரசுஅரசாணை பிறப்பித்துள்ளது. இதில் குழந்தைகள் மையங்கள் மூலம் சத்துணவுத்திட்டத்தில் பயனடைந்து வரும் 2 முதல் 6 வயது குழந்தைகளுக்கு கலைஞர் பிறந்தநாள் அன்று சர்க்கரைபொங்கல் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த அரசாணையை செயல்படுத்த சம்பந்தப்பட்ட சத்துணவு பணியாளர்களுக்கு உடனடியாக தக்க அறிவுரை வழங்கும்படி அரசாணையில் அரசு உயர் அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.