தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் 99-வது பிறந்த நாள் விழா இன்று தமிழ்நாடு முழுக்க கொண்டாடப்பட்டது. அந்தவகையில், திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் கலைஞரின் 99 பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. திமுக திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Advertisment

அதனைத் தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தெற்கு மாவட்டத்தில் அமைந்துள்ள முதியோர் இல்லங்கள், சிறார் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு தேவையான உபகரணம் பொருட்களையும் அன்பில் அறக்கட்டளையின் மூலம் கல்வி நிதி மற்றும் மருத்துவ உதவித் தொகையையும் காசோலை மூலம் வழங்கப்பட்டது.

Advertisment

இதனைத் தொடர்ந்து திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் அமைந்துள்ள கலைஞரின் முழு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன், என். கோவிந்தராஜன், வண்ணை அரங்கநாதன், கவிஞர் சல்மா, திமுக செயலாளர்கள் மு.மதிவாணன், இ.எம். தர்மராஜ், நீலமேகம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.