செந்துறை வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கலைஞரின் பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!

dmk

கலைஞரின் பிறந்தநாளை சேவை தினமாக கொண்டாடும் வகையில் இன்று காலை 9 மணிக்கு செந்துறை வடக்கு ஒன்றியம் ஆர். எஸ். மாத்தூரில் தி.மு.க. ஒன்றிய கழகச் செயலாளர் மு. ஞானமூர்த்தி தலைமையில் கட்சியின் கொடியை ஏற்றிவைத்தும் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு செந்துறை வடக்கு ஒன்றிய கழகம் சார்பில் மலர் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியும், ஊரடங்கால் பாதிக்கப்பட்டு நலிவடைந்த 500 குடும்பங்களுக்கு 100 மூட்டை அரிசி வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

கொள்கைப்பரப்புதுணைச் செயலாளர் ச. அ. பெருநற்கிள்ளி கட்சியின் கொடியை ஏற்றிவைத்து தலைவர் கலைஞர் படத்திற்கு மாலை அணிவித்து சிறப்புறை ஆற்றினார். இருதியில் 500 குடும்பங்களுக்கு 100 மூட்டை அரிசி வழங்கினர். மாவட்ட இலக்கிய அணி பொருளாளர் ஆர். விசுவநாதன், ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள் மா. சிவப்பிரகாசம், கே. ஆர். பெரியசாமி, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ஆ. தமிழ்மாறன், ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் மு. சித்ரா, ஒன்றியத் தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் கோபி, ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் இரா. இராசவேல், சன்னாசிநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் சி. நன்னன், தளவாய் ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் குழுமூர் ஒன்றியக்குழு உறுப்பினர் ம. ரெங்கநாதன்மற்றும் ஊராட்சி கிளைக்கழகச்செயலாளர்கள் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வுக்கு கழகத்தின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும், கழக முன்னோடிகளும் கலந்துகொண்டனர்

kalaingar sendurai
இதையும் படியுங்கள்
Subscribe