Advertisment

கலைஞர் உயிரைக் காப்பாற்றிய அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு கலைஞர் விருது!

kalaignar Award to Minister I Periyasamy

கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் தி.மு.க. பவள விழா ஆண்டையொட்டி கழக முப்பெரும் விழா வருகிற 17ம் தேதி வேலூரில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் கழக துணைப் பொதுச் செயலாளரும்,ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமிக்கு கலைஞர் விருதுவழங்கப்படும் என கட்சியின் தலைமை அறிவித்தது. அதைத் தொடர்ந்து அமைச்சர் ஐ. பெரியசாமியும், கட்சித் தலைவரும் முதல்வருமானஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்.இப்படி முப்பெரும் விழாவில் அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு கலைஞர்விருது வழங்கப்படும் என்ற செய்தியை கேள்விப்பட்டவுடனே திண்டுக்கல்மாவட்டத்தில் உள்ள கட்சிப் பொறுப்பாளர்களும், தொண்டர்களும் அங்கங்கே இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.

Advertisment

அதோடு மேற்குமாவட்ட செயலாளரும், உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சருமான சக்கரபாணி அமைச்சர் ஐ. பெரியசாமியை திண்டுக்கல்லில் உள்ள வீட்டில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். அதைத்தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள கட்சி பொறுப்பாளர்களும் அமைச்சர் ஐ. பெரியசாமியை சந்தித்து மாலை, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். அதேபோல்திண்டுக்கல் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் நாகராஜன், கலைஞர்குடும்பத்திற்கு நீங்கள் தொப்புள்கொடி! கலைஞர் விருதுக்கு வாழ்த்துகிறது கழகத்தின் கொடி!! என்ற வாசகத்துடன் மெகா போஸ்டர் அடித்து திண்டுக்கல்கிழக்கு மாவட்டம் முழுவதும் ஒட்டி இருக்கிறார். அதுபோல் கட்சிப் பொறுப்பாளர்கள் பலரும் ஐ. பெரியசாமிக்கு வாழ்த்து போஸ்டர்களை அடித்து நகரம் முதல் பட்டி தொட்டிகள் வரை ஒட்டியும், ப்ளக்ஸ் பேனர்களையும் வைத்திருக்கிறார்கள்.

Advertisment

kalaignar Award to Minister I Periyasamy

இது சம்மந்தமாக அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் நெருக்கமாக இருக்கும் கட்சிப் பொறுப்பாளர்கள் சிலரிடம் கேட்டபோது, “கட்சி தலைவர், கலைஞர் விருதை எங்க அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு கொடுப்பதாக அறிவித்ததை கண்டு பெருமைப்படுகிறோம். அந்த அளவுக்கு கலைஞர் மேல் இன்னும் அமைச்சர் ஐ. பெரியசாமி உயிரையே வைத்திருக்கிறார். எந்த ஒரு அரசு விழாவானாலும், பொதுக்கூட்டமானாலும் கலைஞர் கொண்டு வந்த திட்டங்களையும் சலுகைகளையும் மக்கள் மத்தியில் முதலில் வெளிப்படுத்திவிட்டு கலைஞர் வழியில் ஆட்சி செய்யும் இந்நாள் முதல்வர் ஸ்டாலின் திட்டங்களையும், சலுகைகளையும் மக்களுக்கு கொண்டு சென்று வருகிறார். அதுபோல் கட்சியை வளர்ப்பதற்காக தலைவர்கலைஞர் எவ்வளவோ கஷ்டப்பட்டு இருக்கிறார்.

கடந்த காலங்களில் கட்சி பிளவுபட்டபோது தமிழகத்தில் பல இடங்களில் கலைஞருக்கு எதிராக கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் குரல் கொடுத்து வந்தனர். அந்த நிலையில் தான் மதுரைக்கு பாண்டியன் எக்ஸ்பிரஸ் மூலம் கலைஞர்வருகிறார் என்று தலைமை அறிவித்ததின் பேரில் தென் மாவட்டபொறுப்பாளர்கள் எல்லாம் மதுரைக்கு படையெடுத்து வந்தனர். ஆனால் அதில்முதல் மாவட்டமாக திண்டுக்கல் மாவட்டம் தான் அமைச்சர் ஐ. பெரியசாமிதலைமையில் மதுரை ரயில் நிலையத்திற்குள் நுழைந்து கலைஞருக்குவரவேற்பு கொடுத்தனர். அப்போது திடீரென சிலர் தலைவருக்கு எதிராக குரல் கொடுத்தும் வாகனங்களை இடையூறாக நிறுத்தி கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். அதையும் சமாளித்து கலைஞரைபாண்டியன் ஓட்டலுக்கு அழைத்து வந்தனர். அப்போது அங்கிருந்த ஒரு கும்பல் ரகளையில் ஈடுபட்டு சேர்களை தூக்கி வீசியதுடன் மட்டுமல்லாமல் கலைஞரையும் தாக்கும் அளவிற்கு முன் வந்தனர். அதைக்கண்டு அதிர்ச்சிஅடைந்த அமைச்சர் ஐ.பெரிசயாமி உடனே கலைஞர் அருகே சென்று நெஞ்சு வரை அலாக்காக இரண்டு கைகளிலும் அரவணைத்து தூக்கிக் கொண்டு போய் ரூமுக்குள் விட்டு உயிரைக் காப்பாற்றியனார். இதனை யெல்லாம் கலைஞர் ஒருபோதும் மறந்ததில்லை. பின்னர் அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

ip

அதைத் தொடர்ந்து அமைச்சர் ஐ. பெரியசாமி சென்னை போகும் போது எல்லாம் கலைஞர் வீட்டுக்கு போய்விட்டு தான் கோட்டைக்கு வருவார். அதைக்கண்ட கலைஞர் பலமுறை அமைச்சர் ஐ.பெரியசாமியை தனது காரில் உட்காருய்யா எனக் கூறி கோட்டை (தலைமைச் செயலகம்) வரை அழைத்துச் செல்வார். அப்போது மாவட்டத்திற்கு தேவையான திட்டங்களையும், சலுகைகளையும், கோரிக்கைகளையும் எடுத்துக் கூறிவிட்டு வந்துவிடுவார். அதை உடனே கலைஞரும் செயல்படுத்தி கொடுத்துவிடுவார். அதுபோல் கட்சிக்காரர்களுக்குஒரு பிரச்சனை என்றால் கலைஞர் காதிற்கு கொண்டு சென்று விடுவார். எங்க கட்சி உடன் இருக்கும் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு மாவட்ட சேர்மன்பதவியை ஒருமுறை ஒதுக்கிவிட்டனர். ஆனால் இந்த பதவியை கட்சியில் சீனியரான நத்தம் ராஜசேகருக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் கூட்டணி கட்சிக்கு போய்விட்டது என்று தெரியவே அமைச்சர் ஐ. பெரியசாமியிடம் முறையிட்டார்.

kalaignar Award to Minister I Periyasamy

உடனே கலைஞர் கவனத்திற்கு கொண்டு சென்றதின்பேரில் அதை மாற்றி ஈரோட்டிற்கு கொடுத்துவிட்டு திண்டுக்கல் மாவட்ட சேர்மனாக நத்தம் ராஜசேகரை நியமித்தார். இப்படி கட்சிக்காரர்களின்குறைகளையும், கோரிக்கைகளையும் நிறைவேற்றி கொடுத்து கட்சியைவளர்த்து வந்ததுமட்டுமல்லாமல் தன்னால் முடிந்த அளவிற்கு கட்சிக்காரர்களுக்கும், பொதுமக்களுக்கும் வேலைவாய்ப்புகளையும், பண உதவிகளையும் செய்து கொடுத்து கொண்டு நல்லது, கெட்டதில் கூட கட்சி பாகுபாடு பார்க்காமல் சென்று வந்ததனாலேயே திண்டுக்கல் மாவட்ட மக்கள்மனதில்நீங்கா இடம் பிடித்துஇருக்கிறார். அதோடு மாவட்டத்தையே தி.மு.க. கோட்டையாகவும் உருவாக்கினார். ஆதனால் அ.தி.மு.க. கோட்டையாக முதலில் இருந்த திண்டுக்கல் மாவட்டத்தை தி.மு.க.கோட்டையாக உருவாக்கியவர்தான் தம்பி என்று கலைஞரே பலமுறை அமைச்சர் ஐ. பெரியசாமியை பாராட்டியும் இருக்கிறார். அப்படிப்பட்ட கலைஞர் இறந்தபோது அமைச்சர் ஐ. பெரியசாமி அவரது உடலைபார்த்து தேம்பி தேம்பி அழுதவர். அப்போது கலைஞருக்கு மெரீனாவில் இடம்கொடுக்க எடப்பாடி மறுத்ததை கண்டு மனம் நொந்து போய் இருந்தார். அதைஎதிர்த்து கோர்ட்டில் தலைவர் ஸ்டாலின் வழக்கு தொடர்ந்ததின் பேரில்நீதியரசர் கலைஞருக்கு இடம் கொடுக்க அனுமதி கொடுத்தார். அதை கேள்விப்பட்ட உடனே மெரீனா பீச்சிற்கு சென்ற அமைச்சர் ஐ.பெரியசாமிஅதற்கான இடங்களை புல்டோசர் வைத்து சமப்படுத்தும் பணியிலும் இறங்கினார்.

அதைத் தொடர்ந்து திண்டுக்கல்லில் நடந்த கலைஞரின்நினைவஞ்சலியில் கலந்து கொண்ட அமைச்சர் பழைய நினைவுகளைநினைத்து கண்கலங்கிவிட்டதை கண்டு உடன் இருந்த உடன்பிறப்புகளும்கண்கலங்கினார்கள். அந்த அளவுக்கு கலைஞர் மேல் அளவுக்குஅதிகமாக பாசம் வைத்திருந்தார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் நான்கரைலட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வேலுச்சாமியை வெற்றி பெற வைத்து தமிழகத்திலேயே முதல் இடமும்பிடித்து முதல்வரிடமே பாராட்டையும் பெற்றார் அமைச்சர் ஐ. பெரியசாமி.

அதுபோல்கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட 14 வேட்பாளர்களையும் ஒட்டுமொத்தமாக டெபாசிட் இழக்க வைத்து 1லட்சத்து 43ஆயிரம் ஓட்டுகள் கூடுதலாக வாங்கிதமிழகத்திலேயே அதிக ஓட்டுக்கள் வாங்கிய பெருமையும் அமைச்சர் ஐ.பி.பெரியசாமிபெற்று இருக்கிறார். அந்த அளவுக்கு கடந்த 50 வருடங்களுக்கு மேலாக முன்னாள் தலைவர் கலைஞரிடமும், இன்னாள் தலைவரும் முதல்வருமான ஸ்டாலினுக்கு விசுவாசமாக இருந்து கொண்டு கட்சியை வளர்த்து வரும் அமைச்சருக்கு கலைஞர் விருதை முதல்வர் அறிவித்ததை கண்டு பூரித்து போனோம். இருந்தாலும் கலைஞர் வழியில், தலைவர் ஸ்டாலின் ஆட்சி செய்வதை பார்க்க கலைஞர் இல்லையே என்ற மன வருத்தம் அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் இருந்தாலும் கூட, அதை தலைவரின் செயல்பாட்டைக் கண்டு திருப்தி அடைந்தும் வருகிறார்” என்றனர்.

kalaignar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe