Advertisment

கலைஞரின் 99வது பிறந்தநாள்! அமைச்சர் செந்தில் பாலாஜி மரியாதை! 

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு கரூரில் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு அமைச்சர் வி.செந்தில்பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Advertisment

தமிழக முன்னாள் முதல்வரும், திமுகவின் தலைவருமான கலைஞரின் 99வது பிறந்தநாளான இன்று,(ஜூன் 3) தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். அந்தவகையில், கரூர் மாவட்டத்தில் இன்று மின்சார, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Advertisment

அதன்பின் ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு எதிரில் புதிதாக கட்டப்பட்டுள்ள திமுக கட்சி அலுவலகத்தைத் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் கலைஞரின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு 99 கிலோ கேக்கை வெட்டி தூய்மைப் பணியாளர்களுக்கு, வேட்டி சேலையுடன் வழங்கினார். இந்நிகழ்வில் கரூர் மாநகராட்சி மேயர், துணை மேயர், மாநகராட்சி ஆணையர், மற்றும் கரூர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

kalaignar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe