தமிழக தொழிலதிபர்களின் கலைஞருக்குப் புகழ் வணக்கம் ! 

kalaignar

தமிழக அரசியல் தலைவர்கள், தேசிய தலைவர்கள், ஆன்மீகப் பெரியவர்கள், பகுத்தறிவாளர்கள், பத்திரிகையாளர்கள், இலக்கியவாதிகள், கவிஞர்கள், அறிஞர்கள் என அனைத்துத் தரப்பினரும் அமரர் கலைஞருக்கு புகழ் வணக்க நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தி கலைஞரின் புகழை நினைவு கூர்ந்து உயர்த்திப் பிடித்தனர்.

இந்த வரிசையில், தமிழக தொழிலதிபர்களும் இணைந்துள்ளனர். சென்னையில் வருகிற 22-ந்தேதி, நுங்கம்பாக்கத்திலுள்ள 5 நட்சத்திர ஹோட்டலான தாஜ் கோரமண்டலில் கலைஞருக்கு புகழ் வணக்க நினைவேந்தல் நிகழ்வினை தமிழக தொழிலதிபர்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிகழ்வில், ஸ்பிக் நிறுவனத்தின் சேர்மன் ஏ.ஸி.முத்தையா, தியாகராய மில்ஸ் சேர்மன் கருமுத்து கண்ணன், டி.வி.எஸ். நிறுவனத்தின் சேர்மன் வேணு சீனிவாசன், இந்திய சிமெண்ட்ஸ் சேர்மன் சீனிவாசன், பாரதிய வித்யா பவன் நிறுவனத்தின் சேர்மன் கிருஷ்ணராஜ் வானவராயர், கவின் கேர் நிறுவன சேர்மன் ரெங்கநாதன், சிம்சன் நிறுவன சேர்மன் கிருஷ்ணமூர்த்தி, முருகப்பா குரூப் ஆஃப் நிறுவன எக்ஸ்கியூட்டிவ் சேர்மன் முருகப்பா, பி.ஜி.பி.குரூப் ஆஃப் நிறுவன சேர்மன் பழனி பெரியசாமி, திரு ஆரூரான் சுகர்ஸ் நிறுவனத்தின் சேர்மன் தியாகராஜன் உள்ளிட்ட தொழிலதிபர்கள் பலரும் கலந்துகொண்டு கலைஞருக்கு புகழ் வணக்கம் செய்கின்றனர்.

kalaignar
இதையும் படியுங்கள்
Subscribe