kalaignar

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கலைஞர் செவ்வாய்க்கிழமை மாலை 6.10 மணிக்கு காலமானார். இதனை அடுத்து, கலைஞரின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

கலைஞரின் உடல் கோபாலபுரம் இல்லத்தில் இறுதி மரியாதை செலுத்தப்பட்ட பிறகு கனிமொழியின் சிஐடி காலனி வீட்டுக்கு ஆம்புலன்சில் எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது ஏராளமான தொண்டர்கள் ஆம்புலன்சின் முன்னும் பின்னும் கட்சிக் கொடிகள் ஏந்தியபடி கண்ணீருடன் நடந்து சென்றனர். அங்கு அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.