Advertisment

திமுக ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட 42 அணைகள்!

kalaignar

தமிழகத்தில் காமராஜர் ஆட்சிக் காலத்தில் மட்டுமே அணைகள் கட்டப்பட்டதாகவும், திமுக ஆட்சிக்காலத்தில் அணைகள் கட்டப்படவில்லை என்பதுபோலவும் ஒரு பிரச்சாரம் சமீப காலங்களில் பரப்பப்பட்டது. ஆனால், உண்மையில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 15 அணைகளும், திமுக ஆட்சிக் காலத்தில் 42 அணைகளும் கட்டப்பட்டுள்ளன.

Advertisment

1967 முதல் 1969ல் அண்ணா மறைவு வரை கலைஞர் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்திருக்கிறார். அந்த காலகட்டத்திலும், முதல்வரான பின்னர் அவருடைய அமைச்சரவையில் சாதிக் பாட்சா, ப.உ.சண்முகம், செ.மாதவன் ஆகியோர் பொதுப்பணித்துறை அமைச்சர்களாக பொறுப்பு வகித்திருக்கிறார்கள்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

1976ல் திமுக ஆட்சி கலைக்கப்படும் வரை திமுக அரசாங்கம் கட்டிய அணைகள் 20. அவை, 1.தும்பலஹள்ளி அணை, 2.சின்னாறு அணை, 3.குண்டேரிப்பள்ளம் அணை, 4.வறட்டுப்பள்ளம் அணை, 5.பாலறு பொருந்தலாறு அணை, 6.வரதமாநதி அணை, 7.வட்டமலைக்கரை ஓடை அணை, 8.பரப்பலாறு அணை, 9.பொன்னியாறு அணை, 10.மருதாநதி அணை, 11.பிளவுக்கல் (பெரியாறு) அணை, 13.கடானா அணை, 14.இராமாநதி அணை, 15.கருப்பாநதி அணை, 16.சித்தாறு-1 அணை, 17.சித்தாறு-2 அணை, 18.மேல் நீராறு அணை, 19.கீழ் நீராறு அணை, 20.பெருவாரிப்பள்ளம் அணை.

இந்த அணைகள் தவிர, 1989 ஆம் ஆண்டு மீண்டும் திமுக ஆட்சி அமைந்த போது பொதுப்பணித்துறை அமைச்சராக துரைமுருகன் பொறுப்பேற்றார். அதன்பிறகு, 1996 முதல் 2001 வரையிலும், 2006 முதல் 2011 வரையிலும் கலைஞர் தலைமையில் திமுக அரசு அமைந்தபோதெல்லாம் துரைமுருகனே பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். அவருடைய பொறுப்புக் காலத்தில் கலைஞரின் ஆணைப்படி கட்டி முடிக்கப்பட்ட அணைகள் 22. அவை, 1.மோர்தானா அணை, 2.இராஜாதோப்பு அணை, 3. ஆண்டியப்பனூர் ஓடை அணை, 4.குப்பநத்தம் அணை, 4.குப்பநத்தம் அணை, 5.மிருகண்டா நதி அணை, 6.செண்பகத்தோப்பு அணை, 7.புத்தன் அணை, 8.மாம்பழத்துறையார் அணை, 9.பொய்கை அணை, 10.நல்லாறு அணை, 11.வடக்கு பச்சையாறு அணை, 12.கொடுமுடி அணை, 13.அடவிநயினார் அணை, 14.சாஸ்தாகோவில் அணை, 15.இருக்கன்குடி அணை, 16.சென்னம்பட்டி அணை, 17.கிருதமால் அணை, 18.நல்லதங்காள் ஓடை அணை, 19.நங்காஞ்சியார் அணை, 20.வரட்டாறு வள்ளி மதுரை அணை, 21.பச்சைமலை அணை, 22.ஆனைவிழுந்தான் ஓடை அணை.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

ஆக, மொத்தத்தில் திமுக ஆட்சியில் கட்டப்பட்ட மொத்த அணைகள் 42. இவைதவிர பாசன வசதிகளுக்காக ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், காமராஜர் காலத்திற்கு பிறகு வேறு எந்த அணையும் கட்டவில்லை என்பது போல ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டது.

kalaignar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe