Advertisment

லெனின் உடலைப் போல கலைஞரின் உடலையும் பதப்படுத்துவோம்: மு. ஞானமூர்த்தி

kalaignar merina

Advertisment

தலைவர் கலைஞர் உடல் அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்கவேண்டும். 80 ஆண்டுகளாக பொதுவாழ்வில் இருந்த தலைவர் என்ற தார்மீக உரிமைக்கு மரியாதை அளிக்க வேண்டும் என செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சருக்கு கடிதம் எழுதி கேட்டதற்க்கு மறுப்பு.

5 முறை தமிழக முதல்வராக இருந்த,13 தடவை சட்டமன்ற உறுப்பினராக இருந்த அண்ணாவின் தம்பி கலைஞருக்கு இடமில்லையாம்.

மெரினாவில் புதிய சமாதிகள் வரக்கூடாது என்பது தான் சட்டம். அதனால் தான் ஜெயலலிதா சமாதி, எம்ஜிஆர் சமாதி வளாகத்திற்கு உள்ளே வைக்கப்பட்டது.தற்பொழுது அண்ணா சமாதி வளாகத்திற்கு உள்ளே கலைஞரின் சமாதி இருப்பதில் எந்த சட்ட சிக்கலும் இல்லை.

Advertisment

ஜெயலலிதாவை அடக்கம் செய்தபோதுசட்ட சிக்கல் எங்கே போனது?.மெரினாவில் இடம் வரும் வரை தலைவர் உடல் அடக்கம் பண்ண கூடாது. அப்படி பண்ண முடிவு எடுத்தால் தொண்டர்களின் போராட்டம் வெடிக்கும்.

தலைவருக்கு மெரினாவில் இடம் கொடுக்கவில்லையானால், ரஷ்ய நாட்டின் அதிபர் லெனின் உடல் பதப்படுத்தப்பட்டது போல் தலைவர் உடலை பாதுகாப்பு செய்யுங்கள்.

நாட்டு மக்கள் நன்கு புரிந்து கொள்ளட்டும். இந்த ஆட்சியாளர்களை அதிகாரத்தில் இருந்து தூக்கி எறிந்துவிட்டு,நமது ஆட்சியை மலரச் செய்து கலைஞரை அண்ணாவின் நினைவிடத்திற்க்கு அருகிலேயே நல்லடக்கம் செய்வோம். இவர்களிடம் கெஞ்சவும் வேண்டாம், அஞ்சவும் வேண்டாம். தலைவரின் ஆன்ம பலத்தை பெறுவோம்.

mg

மு. ஞானமூர்த்தி

செந்துறை ஒன்றிய திமுக செயலாளர்

அரியலூர் மாவட்டம்.

kalaignar merina
இதையும் படியுங்கள்
Subscribe