kalaigar 601.jpg

Advertisment

kalaigar

சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடத்திற்கு அருகே திமுக தலைவர் கலைஞரின் உடல் அடக்கம் செய்வதற்கான பணிகள் நீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னர் வேகமாக நடக்கின்றன. அடக்கம் செய்யும் இடத்தை கட்சியின் துணை பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆய்வு செய்தார். இடம் முடிவு செய்யப்பட்டதும், அந்த பகுதியில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

ராஜாஜி ஹாலில் திமுக தலைவர் கலைஞரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டபின், மாலை 4 மணிக்கு இறுதி ஊர்வலம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊர்வலத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்க திரண்டிருப்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இறுதி ஊர்வலம் அண்ணா சதுக்கத்தை அடைந்ததும், குடும்பத்தினர் மற்றும் தலைவர்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு, கலைஞரின் உடல் அண்ணா நினைவிடத்தற்கு பின்புறம் அடக்கம் செய்யப்படும்.