kala

ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தை கர்நாடக மாநிலத்தில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் வரும் 7ம் தேதி அன்று திரைக்கு வருகிறது. இந்நிலையில், மாநில நலன் கருதி காலாவுக்கு தடை விதிக்கப்படுவதாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் அறிவித்துள்ளார்.

Advertisment

காவிரி பிரச்சனையில் ரஜினிகாந்த் தொடர்ந்து கர்நாடகத்திற்கு எதிராக குரல் கொடுத்து வரும் நிலையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.