Advertisment

கஜா புயல் -  பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு! 

kaja

Advertisment

கஜா புயல் எச்சரிக்கையை தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் சார்பில் வியாழக்கிழமை நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, பின்னர் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தமான் நிகோபார் யூனியன் பிரதேசத்திலும் நடைபெறவிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதேபோல் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் மேடான பகுதிக்கு செல்ல வேண்டுமெனவும், காற்றின் வேகம் அதிகம் இருந்தால் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் எனவும் புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

exam kaja postponed University
இதையும் படியுங்கள்
Subscribe