Skip to main content

ஒருரூபாய் கூட நிவாரணம் வழங்கவில்லை; சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!

Published on 01/12/2018 | Edited on 01/12/2018
kaja strom damage; CPM state secretary K.Balakrishnan condemned

 

மத்திய அரசு தொடர்ந்து  தமிழகத்தை புறக்கணித்து வருகிறது. கஜா புயலுக்கு இதுவரை நிவாரணமாக மக்களுக்கு ஒரு ரூபாய் கூட போய்ச்சேரவில்லை என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

தமிழகத்தில் கஜா புயல் தாக்குதல் சம்பவம் நடைபெற்று இன்றோடு இரண்டு வாரங்கள் ஆகிறது. ஆனால் இதுவரை அரசு சார்பில் ஒரு ரூபாய் கூட பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை வழங்கப்படவிலல்லை. கணக்கெடுப்பு பணி நடைபெறுவதாக அரசு கூறுகிறது. கணக்கெடுப்பு பணியே நடக்காமல் ஒரு முதலமைச்சர் எப்படி மத்திய அரசிடம் 4வது நாளே போய் 15 ஆயிரம் கோடி வேண்டும் என்று பிரதமரிடம் போய் மனு கொடுத்தார் என்று தெரியவில்லை. ஏன் நிவாரணம் கொடுக்கவில்லை என்றால் கணக்கெடுத்துக்கொண்டு இருப்பதாக கூறுகிறார்கள். கணக்கெடுத்த பிறகு தான் பிரமரைச் சந்திப்பதாகவும் கூறுகிறார்கள். ஏன் இந்த முரண்பட்ட நிலை. தமிழக முதல்வர் பிரமதரைச் சந்தித்தது கஜா புயலுக்காக சந்தித்ததாக நாங்கள் கருதவில்லை. சில அரசியல் தேவைகளையொட்டி அவர் சந்தித்தாக நாங்கள் கருதுகிறோம். அதற்கு கஜா புயலை ஒரு காரணம் காட்டியிருக்கிறார் என்ற தெரிகிறது. 

 

அதன் வெளிப்பாடுதான் தேர்தல் கமிசனே முன்வந்து 20 தொகுதிகளுக்கு இப்போது இடைதேர்தல் சாத்தியமா என்று சொல்லியிருக்கிறது. யாருமே கேட்காமல் தேர்தல் கமிசன் முந்திக்கொண்டு சொல்லியிருப்பதைப் பார்த்தால் அதன் நோக்கம் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. எனவே உடனடியாக தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும். இன்னமும் முகாம்களில் உள்ள மக்கள் வீடு திரும்ப முடியவில்லை. நிவாரணம் வழங்காமல் அந்த மக்களின் வாழ்வு மிகப்பெரிய சோதனைக்கு ஆளாகி இருக்கிறது. 

 

புயல் பாதிப்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் போன்ற பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 15 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மக்காச்சோளம் அழிந்துள்ளது. இங்கெல்லாம் கணக்கெடுப்பு பணி நடைபெறவில்லை என்று தெரிவிக்கிறார்கள். டெல்டா மாவட்டத்தில் கணக்கெடுப்பு நடப்பதாக கூறுகிறார்கள். ஆனால் இங்கு நடைபெறுவதாக தெரியவில்லை. தமிழகத்திற்கு இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டும் கூட பிரதமர்  மோடி இந்த பகுதிகளை வந்து பார்க்க வரவில்லை. இதனை பார்க்கும் போது தமிழகத்தை மத்திய அரசு திட்டமிட்டு புறக்கணிக்கிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது. 

 

 

15 ஆயிரம் கோடிக்கு பிரதமரிடம் முதலமைச்சர் மனு கொடுத்துள்ளார். ஆனால் 200 கோடி என்ற அளவில் முதல் தவணையாக அறிவித்துள்ளது மத்திய அரசு. எவ்வளவு கொடுப்பார்கள் என்று நமக்கு நிச்சயமாக தெரியாது. பிரதமராக மோடி பதவி ஏற்ற பிறகு 2015ம் ஆண்டு முதல் தமிழகத்தில் ஏற்பட்ட வறட்சி, வெள்ளம், புயல் சேததத்திற்கு மத்திய அரசிடம் கேட்ட நிவாரண தொகை 97,352 கோடி வேண்டும் என்று தமிழக அரசு சார்பாக கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால் மத்திய அரசு 4242 கோடி தான் வழங்கியிருக்கிறது. அதாவது  5 சதவீதம்  நிதி தான் வழங்கியிருக்கிறது. இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்கும் போது மத்திய அரசிடம் தமிழக அரசு கையேந்துகிற நிலை உள்ளது. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். 

 

இதேபோல் மேகதாதுவில் அணைக்கட்டுகிற கர்நாடக அரசைக் கண்டித்து டிசம்பர் 4ம்  தேதி அனைத்து எதிர்க்கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. கஜா புயல் பாதிப்பு தொடர்பாகவும் அனைத்து கட்சிகளும்  ஆர்ப்பாட்டம் செய்வது குறித்து ஆலோசித்து உள்ளோம் என்று திண்டுக்கல்லில் சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம்  தெரிவித்தார். பேட்டியின் போது சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி, மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் உள்பட சில பொறுப்பாளர்கள் இருந்தனர்!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெற்றி துரைசாமி உடலுக்கு அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
Chief Minister personally paid tribute to Vetri Duraisamy

சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி, அவரது நண்பர் கோபிநாத் மற்றும் ஓட்டுநர் டென்சிங் உள்ளிட்ட 3 பேர் இமாச்சலப்பிரதேசத்தில் கஷங் நாலா என்ற பகுதியில் உள்ள சட்லஜ் நதிக்கரையின் அருகே அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 4 ஆம் தேதி (04.02.2024) மாலை காரில் பயணம் செய்தனர். அப்போது இவர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளாகி சட்லஜ் நதியில் விழுந்தது.

இந்த விபத்தில் சிக்கி காரில் வெற்றி துரைசாமியுடன் பயணித்த திருப்பூரைச் சேர்ந்த அவரது நண்பர் கோபிநாத் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் சிக்கிப் பலியான கார் ஓட்டுநர் டென்சிங் சடலமாக மீட்கப்பட்டார். கடந்த 8 நாட்களாக நடைபெற்ற தேடுதலுக்குப் பிறகு வெற்றி துரைசாமியின் உடல் நேற்று (12.02.2024) மீட்கப்பட்டது. தொடர்ந்து வெற்றி துரைசாமியின் உடல் இமாச்சலப்பிரதேசத்தில் இருந்து இன்று (13.02.2024) சென்னை கொண்டு வரப்பட்டது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை சிஐடி நகரில் உள்ள இல்லத்தில் மக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெற்றி துரைசாமியின் வீட்டிற்கு வந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து வைகோ, அமைச்சர்கள் மா. சுப்ரமணியன், சேகர்பாபு, எடப்பாடி பழனிசாமி, திருமாவளவன், வி.கே. சசிகலா, கே. பாலகிருஷ்ணன், சீமான், அன்புமணி ராமதாஸ், முத்தரசன் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

Next Story

ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் - கே.பாலகிருஷ்ணன் அறிவிப்பு 

Published on 01/11/2023 | Edited on 01/11/2023

 

Black Flag Demonstration Against Governor-Marxist Communist State Secretary K. Balakrishnan Announcement

 

சுதந்திரத்திற்காகவும் போராடிய சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் தர மறுத்துவரும் நிலையில், தமிழக ஆளுநருக்கு எதிரான குரல்கள் உயர்ந்து வருகிறது. ஏற்கனவே தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தராததை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. சமீபமாக ஆளுநரின் பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் பரிந்துரைக்கு ஆளுநர் மறுத்துள்ளதால், நாளை அவர் பங்கேற்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு வரும் ஆளுநருக்கு எதிராக நாளை கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் முடிவுகளுக்கு தமிழக ஆளுநர் முட்டுக்கட்டை போட்டு வருவதற்கும், விடுதலை போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் கோப்பில் கையெழுத்திட மறுப்பதைக் கண்டித்தும் இந்த கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.