ddd

கஜா புயலால் சென்னையை பொறுத்தவரை நேரடியாக பாதிப்பு இல்லை. இடைவெளிவிட்டு மழை பெய்யும். கஜா புயல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அரசுக்கு தெரிவித்து வருகிறோம் என்று சென்னையில் இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்குநர் கே.ஜே.ரமேஷ் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார்.

புயல் கரையை கடக்கும்போது 20 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. புயல் கரையை கடக்கும்போது 80 கி.மீ. முதல் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். கடலூர், நாகை, காரைக்கால், திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் மழை பெய்யும். புயல் கரையை கடக்கும்போது 4 மணி நேரம் ஆகும. அப்போது மழை பெய்யும் என்றார்.

Advertisment