Advertisment

கஜா புயல் பாதிப்பு; ஆளுநர் நேரில் ஆய்வு!!

 governor

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக ஆளுநர் ஆய்வு செய்து வருகிறார்.

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களை சின்னாபின்னமாக்கிய கஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் இன்னும் பல கிராமங்கள் மீளமுடியாத நிலையில் பெரும் துயரை சந்தித்து வருகிறது. கஜா புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளால் தமிழக கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கஜா புயல் பாதிப்பால் 46 பேர் உயிரிழந்த நிலையில் நிவாரண பணிகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது.

குறிப்பாக நாகை மற்றும் வேதாரண்யத்தில் அதன் பாதிப்பும் அதிகமாக உள்ளதால் அதிகமாக சேதமடைந்த பகுதிகளுக்கு அமைச்சர்கள் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு நிவாரண நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவெடுத்து பணிகளை தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இன்று தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் வெள்ளப்பள்ளத்தில்புயல் சேத பகுதிகளுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேரில் சென்று ஆய்வு நடத்திவருகிறார்.

Advertisment
panvarilal prohith governor kaja cyclone
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe