Advertisment

நாகை - பசியால் தவிப்பவர்களுக்கு உணவு விநியோகம் - புகார், கோரிக்கை குறித்து நடவடிக்கை: தமிமுன் அன்சாரி 

Advertisment

கஜா புயல் முழுமையாக கரையை கடந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கஜா புயல் நாகை, தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் அதிக சேதத்தை ஏற்படுத்தி உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கஜா புயல் தாக்கிய 16.11. 18 அன்று காலை 6.30 முதல் மஜக பொதுச் செயலாளரும், நாகை எம்.எல்.ஏ.வுமான தமிமுன் அன்சாரி பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று மக்களை சந்தித்து நிவாரண பணிகளை செய்து வருகிறார்.கலெக்டரை சந்தித்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

நம்மிடம் பேசிய தமிமுன் அன்சாரி, முக்கிய சாலைகளில் மரங்கள் அகற்றப்பட்டு போர் கால அடிப்படையில் பணிகள் நடைப்பெற்று வருகிறது. குறுக்கு சாலைகளில் இப்பணிகள் மதியம் முதல் முழு வீச்சில் தொடங்கப்பட உள்ளது. மஜக பேரிடர் மீட்பு குழு உட்பட பல தன்னார்வ அமைப்புகளும் களத்துக்கு வந்துள்ளன. பொதுமக்களும் மீட்பு பணிகளில் தன்னார்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

பசியால் தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.இவற்றை நேரில் கண்காணித்தேன்.எம்.எல்.ஏ. அலுவலகத்தில் வரும் புகார்கள், கோரிக்கைகள் மீது உடனுக்குடன் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்று கூறினார்.

kaja MLA nagai Tamimun Ansari
இதையும் படியுங்கள்
Subscribe