தமிழ்நாடு அரசின் சார்பில், காயிதே மில்லத்தின் 126வது பிறந்தநாள் இன்று (05.06.2021) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள அவருடைய நினைவிடத்தில், இன்று காலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Advertisment

அதேபோல், காங்கிரஸ் கட்சியின் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஜே.எம். ஹசன் மெளலானா, மதிமுக கட்சியின் தலைவர் வைகோ ஆகியோரும் மலர் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினர்.