சீனாவின் மானசரோவர், நேபாளத்தின் முக்திநாத்துக்கு புனித யாத்திரை செல்ல மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tnhrce.jpg)
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "2019 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் யாத்திரை சென்றோரும், மார்ச் 2020க்குள் செல்ல உள்ளோரும் மணியத்துக்கு விண்ணப்பிக்கலாம். மானசரோவர் மற்றும் முக்திநாத் யாத்ரீகர்கள் தலா 500 பேருக்கு முறையே ரூபாய் 50,000 மற்றும் ரூபாய் 10,000 மானியம் தரப்படும். விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள் 30.04.2020 ஆகும். மானியம் பெற https://tnhrce.gov.in/hrcehome/index.php என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us