Advertisment

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதே போல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் கூட்டணி பங்கீடு குறித்தும் அனைத்து கட்சியினரும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ககன் தீப் சிங் பேடி ஆலோசனை நடத்தினார்.