Advertisment

எனது தாயை மீட்டுத் தாருங்கள் - ராமதாஸ்க்கு காடுவெட்டி குரு மகன் கோரிக்கை

Kaduvetti Guru - son

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

உறவினர்களிடம் இருந்து தனது தாயை மீட்டுத் தாருங்கள் என்று மறைந்த காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வீடியோ காட்சி வாட்ஸ் அப்புகளில் பரவி வருகிறது.

Advertisment

வீடியோவில் கனலரசன், என்னோட அம்மா கையெழுத்திட்ட மாதிரி யாரோ ஒரு கடிதம் வெளியிட்டிருந்தார்கள். அந்த கடிதத்தில் இருப்பது பொய்யான செய்தி என்று நானும் கூறியிருந்தேன்.

Kaduvetti Guru - son

எங்க அப்பா இறந்ததில் இருந்து எங்க அம்மா ரொம்ப மனவருத்தத்தில் இருந்தார். எங்க அம்மாவுக்கு ஆறுதலாக இருக்கும் என நினைத்து அவுங்க பிறந்த வீட்டுக்கு அனுப்பி வைத்தேன். போன இடத்தில் என்ன ஆனது என்று தெரியவில்லை. எங்க அம்மாவின் கால் உடைந்தது. விழுந்து காலை உடைத்துக்கொண்டாரா அல்லது உறவினர்கள் யாராவது தள்ளிவிட்டார்களா என்று இன்னமும் எனக்கு சந்தேகமாகத்தான் இருக்கிறது.

மருத்துவமனையில் இருந்ததில் இருந்து நான் எங்க அம்மாவை பார்க்க சென்றால், உறவினர்கள் உடன் இருந்து கொண்டு அம்மாவிடம் சரியாக பேசவிடவில்லை. ஒவ்வொரு முறையில் நான் அம்மாவிடம் செல்லும்போது, சரியாக பேசவிடுவதில்லை. அம்மா ஒரு பதட்டமாகவே காணப்பட்டார்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

தீபாவளிக்கு நான் அழைத்தப்போது கூட, நான் இப்போது வரும் நிலையில் இல்லை என்றார். ஊர் பெரியவர்களை வைத்து பேசி பார்த்தேன். அப்போதும் அவர் வரவில்லை என்று கூறிவிட்டார்.

கடந்த ஒரு வாரமாகவே எங்க அம்மாவை தொடர்பு கொள்ள முடியவில்லை. எங்க அம்மாவுக்கு எழுத படிக்க தெரியாது. எங்க அம்மாவை எங்கு மிரட்டி வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. எங்க அம்மாவை அய்யாதான் கண்டுபிடித்து எங்கள் ஊர் காடுவெட்டியில் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Kaduvetti guru son
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe