Advertisment

காடுவெட்டி குரு காலமானார்

guru

Advertisment

வன்னியர் சங்கத்தலைவரும், பாமகவின் முன்னணி தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான காடுவெட்டி ஜெ.குரு ( 57) காலமானார்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சிகிச்சைபெற்று வந்தார். கடந்த சில நாட்களாக மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிக்சிசை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தில் பிறந்த குரு, பாமக சார்பில் 2முறை எம்.எல்.ஏவாக இருந்துள்ளார். ல் ஆண்டிமடம், 2011ல் ஜெயங்கொண்டம் தொகுதிகளில் போட்டியிட்டு வென்றவர் ஜெ.குரு.

Advertisment

ஜெ.குரு நுரையீரல் தொற்று காரணமாக கடந்த ஒரு ஆண்டாக சிரமப்பட்டு வந்தார். புத்தாண்டு தினத்தன்று திடீரென்று உடல்நிலை மோசம் அடைந்ததால் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும்,அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருந்ததை அடுத்து, ஜெ.குரு உடல்நலம் பெற வேண்டி பா.ம.க.வினர் கோவில்களில் வழிபாடு நடத்தி வருகிறார்கள். பாமக இளைஞரணி தலைவரும் எம்பியுமான அன்புமணி மற்றும் அவரது மனைவி சவுமியா அன்புமணி ஆகியோர் வடபழனி முருகன் கோவிலில் வழிபாடு நடத்தினார்கள்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று இரவு காலமானார்.

away Guru passed Kaduvetti
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe