பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், வன்னியர் சங்கத் தலைவருமான ஜெ.குரு உடல்நலக்குறைவால் காலமானார். குரு அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி 30.05.2018 புதன் கிழமை காலை 10.00 மணிக்கு பாண்டிச்சேரி டோல்கேட் அருகில் உள்ள சங்கமித்ரா திருமண அரங்கில் நடைப்பெற்றது.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்த இந்த நிகழ்வில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரும், பா.ம.க., வன்னியர் சங்கம் மற்றும் பா.ம.க. துணை அமைப்புகளின் முன்னணி தலைவர்களும் கலந்து கொண்டனர்.