தூத்துக்குடி போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். மேலும் அங்கு 144 தடை உத்தரவும் விதிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி 144 தடை உத்தரவு இருப்பதால் தன்னால் அங்கு செல்லமுடியாது எனக் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. தற்போது 144 தடை உத்தரவு திரும்பப்பெறப்பட்டுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kadambu-raju1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kadambur-raju-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kadambur-raju1.jpg)
நாளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தூத்துக்குடியில் ஆய்வுசெய்ய உள்ள நிலையில் இன்று செய்தித்துறை அமைச்சரான கடம்பூர் ராஜு இன்று காலை தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். பின் ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் உயர் போலிஸ் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். அப்போது அவரிடம் அதிகாரிகள், பேரணி மற்றும் கலவரம் தொடர்பாக நடந்தவைகளை எடுத்துக்கூறினார்கள். தொடர்ந்து அதுத்தொடர்பாக எடுக்கக்கப்பட்ட நடவடிக்கைகளையும் விவரித்தார்கள். இந்த ஆய்வை முடித்துக்கொண்ட அமைச்சர் கடம்பூர் ராஜு கலவரத்தில் சேதாரமான இடங்களை பார்வையிட்டார். பின்னர் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக அங்கே சென்றார். காயம்பட்டவர்களிடம் ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த அமைச்சரிடம், அங்கிருந்த பாதிக்கப்பட்ட மக்கள் வந்தனர். ஸ்டெர்லைட் ஆலை வெளியேற்றும் நச்சுப்புகையால் நாங்கள் பாதிக்கப்பட்டு வருகிறோம். அதை மூடுவதற்காகத்தானே நாங்கள் போராடினோம். அதற்காக உங்கள் போலீஸ் எங்களை அடித்து காயப்படுத்தியும், சுட்டுத்தள்ளியும் இருக்கிறது. பொதுநலனுக்கு போராடியதற்காக கிடத்தது இதுதானா? என்று அவர்கள் அமைச்சரிடம் கண்ணீரும், கொதிப்புமாக சொன்னார்கள். அவர்களுக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் ஆலையை மூடுவதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். மருத்துவமனையில் அமைச்சர் முக்கால் மணிநேரம் மட்டுமே இருந்தார். அமைச்சருடன் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Follow Us