Advertisment

தமிழ் ராக்கர்ஸை தமிழக அரசால் மட்டும் ஒழிக்க முடியாது: கடம்பூர் ராஜூ

kadambur_raju

தமிழ் ராக்கர்ஸை தமிழக அரசால் மட்டும் ஒழிக்க முடியாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

Advertisment

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளிவந்துள்ளது. கடந்த 29ந் தேதி படம் வெளியான சில மணிநேரங்களில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இது தமிழ் திரையுலகில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜூ, தமிழ் ராக்கர்சை தமிழக அரசால் மட்டும் ஒழிக்க முடியாது. தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் போன்றோர் இணைந்து வந்தால் மட்டுமே ஒழிக்க முடியும். திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க தனி சட்டம் உள்ளது. அதனை நடைமுறைப்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறினார்.

tamilrockers kadambur raju
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe