Kadambur Raju has given free tickets to Jailer movie for Rajini fans

Advertisment

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, ரஜினி ரசிகர்களுக்கு ஜெயிலர் படத்தின் டிக்கெட்டுகளை இலவசமாக வாங்கிக்கொடுத்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளராகப் பதவியேற்ற பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கட்சி மாநாடு வரும் 20 ஆம் தேதி மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ரஜினி ரசிகர்களை மதுரையில் நடக்கும் அதிமுக மாநாட்டிற்கு ஜெயிலர் பட டிக்கெட்டை கொடுத்து அழைத்துள்ளார்.

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் திரையரங்குகளில் ‘ஜெயிலர்’ படம் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இன்று காலை கோவில்பட்டியில் உள்ள ஒரு திரையரங்கில் காலைக் காட்சி முழுவதையும் முன்னாள்அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு முன்பதிவு செய்துள்ளார். பின்பு அந்த டிக்கெட்டுகளை ரஜினி ரசிகர்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளார். அத்தோடு ஜெயிலர் படம் பார்த்த பிறகு 20 ஆம் தேதி மதுரையில் நடைபெறவிருக்கும் கட்டியின் மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு கோரிக்கையும் விடுத்துள்ளார்.