Pudukkottai - Inscription - invention

சேலத்தைசேர்ந்த ராதாகிருஷ்ணன்சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், சென்னையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு கச்சாலீஸ்வரர் ஆலயத்துக்குச் சொந்தமான தெப்பக்குளத்தில் நடத்தப்படும்விழாவில், அருள்மிகு கச்சாலீஸ்வரர், அருள்மிகு காளியம்மன், அருள்மிகு முத்துகுமாரசுவாமி, அருள்மிகு சிவசண்முக விநாயகர், அருள்மிகு முத்துமாரியம்மன் ஆகியஆலய தெய்வங்களை வைத்து5 நாட்கள் விழா நடக்கிறது.

Advertisment

Advertisment

ஆலயத்தைச் சரியாக பராமரிக்காததால், குளத்தின் தண்ணீர் வரத்து தடைபட்டுகடந்த 9 ஆண்டுகளாக தெப்பத்திருவிழா நடத்தப்படாமல் உள்ளது. குளத்தைச் சுற்றியுள்ள சுவர்கள் சிதிலமடைந்து காணப்படுவதால், அருகில் வசிக்கும் பொதுமக்களின் உயிருக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

இதுகுறித்து, தமிழக ஆளுநர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறைக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால்ஆலயத்தை பராமரிக்கவும், கோவிலுக்குசொந்தமான சொத்துகளை கண்டறிய ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அடங்கிய அமர்வு, கோவிலுக்குச் சொந்தமான சொத்துகளை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.