Advertisment

ஆடுகளத்திலேயே பிரிந்த கபடி வீரர் உயிர்! 

kabaddi player incident at play ground

Advertisment

கபடி விளையாடிக் கொண்டிருந்த வீரர் ஆடுகளத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள மானடிக்குப்பம் பகுதியில் கபடி போட்டி நடைபெற்றது. அப்போது, இரவு 11.00 மணியளவில் கபடி விளையாடிக் கொண்டிருந்த புறந்தனி கிராமத்தைச் சேர்ந்த விமல்ராஜ் என்ற21 வயது இளைஞர் நன்றாக விளையாடிக் கொண்டே இருந்து, ஒரு கட்டத்தில் ஆடுகளத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

சக வீரர்கள் அதிர்ச்சியில் செய்வதறியாது கண்ணீரில் ஆழ்ந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

incident PLAYER
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe