Advertisment

காட்டுமன்னார்கோயில் வெடிவிபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

kaattumannar kovil fire accident

Advertisment

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அடுத்த குருங்குடி கிராமத்தில் வெடிமருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 பெண்கள் பலியாகினர். இவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் தேன்மொழி தலைமை தாங்கினார். மேலும், நிகழ்ச்சியில் மாவட்ட குழு உறுப்பினர்களானபிரகாஷ், இளங்கோவன், ஆதிமூலம், தினேஷ் உள்ளிட்டோர்கலந்து கொண்டு இறந்து போன குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

crackers plant kaattumannarkovil
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe