ரஜினியின் காலா படம் ரிலீஸ் என்றது முதல் தினம் தினம் பரபரப்புதான்.

நேற்று தமிழகத்தில் காலா படம் திரையிடப்பட்ட திரையரங்குகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.புதுக்கோட்டை ஆர்.கே.பி திரையரங்கில் காலா படம் திரையிடப்பட்டது. கந்தர்வகோட்டை பகுதியில் இருந்து இரு வேன்களில் ரசிகர்கள் காலா பார்க்க வந்துள்ளனர். அப்போது திரையரங்கிற்குள் மற்றொரு குழு ரசிகர்களுடன் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதனால் உள்ளூர் ரசிகர்கள் பாதியிலேயே வெளியேறிவிட்டனர்.

Advertisment

kaalaa

இந்த நிலையில் படம் முடிந்து கந்தர்வகோட்டை ரசிகர்கள் தாங்கள் வந்த வேன்களில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த போது புதுக்கோட்டை நகரைக் கடந்து மச்சுவாடி பகுதியில் தயாராக நின்ற ஒரு கும்பல் ரஜினி ரசிகர்கள் வந்த வேன்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் இரு வேன் கண்ணாடிகளும் உடைந்து சிதறியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தாக்குதல்நடத்திய மர்ம கும்பல் தப்பி சென்றுவிட்டனர். சம்பவம் குறித்து போலிசார் விசாரனை செய்து வருகின்றனர்.