Skip to main content

”‘அக்னிபாத்’ திட்டம் இளைஞர்களை வன்முறைக்குத் தூண்டியுள்ளது...” - கி.வீரமணி 

Published on 18/06/2022 | Edited on 18/06/2022

 

K Veeramani statement about agni path issue

 

உயிரைப் பணயம் வைத்து இராணுவத்தில் சேரும் இளைஞர்களுக்கு 4 ஆண்டுகள் மட்டுமே பணி என்ற ஒப்பந்த முறை - இளைஞர்களை எரிச்சலுக்கு ஆளாக்கி வன்முறைப் பக்கம் தள்ளியுள்ளது. இந்த முறையைக் கைவிட்டு ஏற்கெனவே உள்ளபடி 15 ஆண்டுகள் பணியாற்றும் வகையில் திருத்தம் செய்யவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.

 

அவரது அறிக்கை வருமாறு: “ராணுவத்திற்கு இளைஞர்களைச் சேர்த்துப் பயிற்சியளிக்கும் ‘அக்னிபாத்’ என்ற ஒரு திட்டத்தை பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் பா.ஜ.க. (ஒன்றிய) அரசு தொடங்கி வைத்துள்ளதில் உள்ள பல குறைபாடுகளால், நம் நாட்டில் இராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற விரும்பிய இளைஞர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு, அக்கிளர்ச்சியை அடக்க முயன்று, அவர்கள் எதிர்விளைவுகளில், ஆங்காங்கு கிளர்ச்சிகளில் ஈடுபட்டு இரயிலுக்குத் தீ வைக்கப்பட்டு, அரசாங்கம், இளைஞர்களின் அதிருப்தி - எதிர்ப்பு என்ற பெரு நெருப்போடு விளையாடும் ‘அக்னிபாத்’  என்ற ‘நெருப்புப் பாதை’யாக வட மாநிலங்களில் பல நகரங்களில் பரவி வருவது மிகவும் வேதனைக்கும், வருத்தத்திற்கும் உரியதாகும்.

 

மோடி அரசின் முன்யோசனையற்ற செயல்பாடுகள்


எந்த ஒரு திட்டத்தையும் நன்கு ஆராய்ந்து, சம்பந்தப்பட்டவர்களது கருத்தும், இசைவும் ஏற்படுமா என்ற ஆய்வுதான் முன்னோட்டமாக இருக்கவேண்டும்; ஆனால், கடந்த 8 ஆண்டுகளாக நடைபெறும் பிரதமர் மோடி தலைமையிலான அரசில், பல சட்ட மசோதாக்களும், அறிவிக்கும் திட்டங்களும் ‘தானடித்த மூப்பாகவே’ அமைந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனைப் படித்து உள்வாங்கி, ஆக்கப்பூர்வ கருத்துகளை எடுத்து வைப்பதைக்கூட விரும்பாமையால், அவசரக் கோலம் அள்ளித் தெளித்த நிலைதான் ஏற்படும். எடுத்துக்காட்டு, மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து ஓராண்டு விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்குப் பிறகு, அவை திரும்பப் பெறப்பட்டு, பிரதமர் மோடி அதற்காக மன்னிப்பும் விவசாயிகளிடம் கோரிய நிலையும் ஏற்பட்டது.

 

கரோனா கொடுந்தொற்றால் 2 ஆண்டுகளாக புது வேலை வாய்ப்பு ஏற்படாதது மட்டுமல்ல; பழைய வேலைகளும் பறிபோயின. இளைஞர்கள் பலர் வேதனை, விரக்தி, மன அழுத்தம் காரணமாக தற்கொலைவரைகூடச் சென்றதுண்டு. இப்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த ‘அக்னிபாத்’ இராணுவத்தில் சேர 4 ஆண்டுகள் பயிற்சியோடு இணைத்து - முடிந்துவிடுமாம். அதுகூட ஒப்பந்த முறையில் நியமனங்கள். முன்பு இருந்த சட்ட நிலையின்படி, 15 ஆண்டுகள் சேவை அதன் பிறகு அவர்களுக்கு ஓய்வூயதியம் (பென்ஷன்) உண்டு.


இராணுவத்தில் ஒப்பந்த முறையில் ஆள் எடுப்பதா?

உயிரைத் துச்சமெனக் கருதி களத்தில் நிற்கும் இளைஞர்கள் ஓர் அர்ப்பணிப்போடு பணி செய்து, பனி மலையிலும் உயிர்க்கொல்லி சூழலிலும் பணி செய்வது பெரும்பேறு என்ற எண்ணத்தோடு பணி செய்யும் நிலையை மாற்றி, முதலில் 4 ஆண்டுகள், பிறகு அனுப்பிவிட்டு, அதன் பிறகு அவர்களில் தகுதி பார்த்து சிலரை மீண்டும் இராணுவத்திற்கு எடுப்பது என்பதெல்லாம் முறையற்ற முறை என்பது நாட்டில் பல அறிஞர்கள், வல்லுநர்களின் கருத்து.


பல ஆண்டுகாலம் வேலை கிட்டா வேதனைக்கு விடியல் இந்த 4 ஆண்டுகள், அதுவும் ஒப்பந்த முறைமூலம் தீர்வு ஒருபோதும் ஏற்படவே ஏற்படாது. உயிர்த் தியாகம் செய்யும், கட்டுப்பாடுகள் நிறைந்த ஒரு உயர் தொண்டு பணியில் ஈடுபடும் இளைஞர்களுக்கு அந்தப் பணி நிரந்தரமல்ல என்பதும், அது அரசாங்கத்தின் ஒப்பந்தப் பணி (Contract Labour) என்பதாக இருப்பதும் எவ்வகையில் நியாயமானது?


இளைஞர்களின் குமுறலில் நியாயம் இருக்கிறது


இளைஞர்களின் குமுறல், ஆத்திரம் நியாயம்தானே! அதற்காக வன்முறையை நியாயப்படுத்த முடியாது என்றாலும், உணர்ச்சிவயப்பட்ட அவ்வகையில் உள்ள அந்த இளைஞர்களின் விரக்தி - வேதனை கடந்த பல ஆண்டுகளாக வறுமை காரணமாக ஏற்பட்ட மன வலி; இவற்றால் அவர்கள் இப்படி நெருப்பு வைக்கும் பாதையில் தங்களையும் அறியாமல் ஈடுபட வைப்பதற்கு மூலம் ஒன்றிய அரசின் தவறான நியமன முறை முடிவுதானே.


ஆர்.எஸ்.எஸ். திட்டம் இதில் மறைமுகமான  திட்டமாக உள்ளது. ஆர்.எஸ்.எஸ். பயிற்சி ஷாகா நடத்திய இளைஞர்கள், பயிற்றுவித்த அவர்களை மட்டும் இராணுவத்தில் நுழைக்கும் சூழ்ச்சியும் இதில் பதுங்கி இருக்கிறது எனப் பலராலும் விமர்சிக்கப்படுவதில் அறவே உண்மையில்லை என்று புறந்தள்ளிவிட முடியாது.


ஹிந்துவை இராணுவ மயமாக்குவது என்ற திட்டம்


காரணம், ‘ஹிந்துத்துவா’ நூலின்படி (1922 இல் எழுதப்பட்டு, தற்போது சரியாக 100 ஆண்டுகள்) ‘ஹிந்துத்துவாவை’ நிலைநாட்டிப் பாதுகாக்க ‘’Militarize Hindu; Hindurise Military’’ - ‘ஹிந்துவை இராணுவமயமாக்கு; இராணுவத்தை ஹிந்துமயமாக்கு’ என்ற கருத்தியலை விதித்துள்ளதின் செயலாக்கம்தான் இந்த 4 ஆண்டு இராணுவப் பயிற்சி - அதுவும் காண்ட்ராக்ட்மூலம் என்பது, ஒப்பந்தம் மூலம் இராணுவ வீரர்கள் சேர்க்கப்பட்டால், அவர்களுக்குப் பணியில் ஈடுபாடு ஏற்படுமா? சேவை உணர்வு வருமா? நாட்டின் பாதுகாப்பை இந்த முறையில் குளறுபடிகள் நிறைந்தவைகளாக ஒன்றிய அரசும், பாதுகாப்புத் துறையும் ஆக்குவது ஏற்கத்தக்கதா.

 

நாட்டில் காட்டுத்தீபோல பரவும் இளைஞர்களின் கிளர்ச்சியை தவிர்க்க ஒரே வழிதான் உண்டு. 15 ஆண்டு பணி என்ற பழைய நிலை தொடரட்டும். அந்தத் திட்டத்தையே கைவிட்டு, பழைய நிலையையே (நிரந்தரப் பணி) - 15 ஆண்டு - ஓய்வூதியம் என்பது போன்ற விதிகளுடன் செயல்படட்டும். புதிய நியமன முறையை உடனடியாக நிறுத்தி வைத்தோ, திரும்பப் பெற்றோ, நாட்டில் பரவும் சட்டம் - ஒழுங்கு முறையைக் கேள்விக்  குறியாக்கும் நிலையைத் தவிர்க்க, காலதாமதம் ஆகாமல் முடிவினை எடுக்கவேண்டும்; இதில் வறட்டுப் பிடிவாதம் வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம். நெருப்போடு விளையாடுவதுபோல இளைஞர்களின் உணர்வை மதிக்காத போக்கு. மறுபரிசீலனை கட்டாயம் தேவை” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'இன்றே எழுதி வைத்துவிடலாம்; அந்தக் கதிதான் அதிமுகவுக்கு' - கி.வீரமணி விமர்சனம்!

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
 'Let's write it down today; That's the fate of AIADMK'- K. Veeramani review

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த 14 ஆம் தேதி (14.06.2024) விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட உள்ளனர். அதே சமயம் அதிமுக இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 'Let's write it down today; That's the fate of AIADMK'- K. Veeramani review

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த  திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேசுகையில், “ஏற்கெனவே நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக பல இடங்களில் டெபாசிடை இழந்தது. தேர்தல் ஆணையம் இருக்கும்போது இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக பயப்படுவது ஏன்? இடைத்தேர்தலில் போட்டியிட்டால் டெபாசிட் போய்விடும் என்பதால்தான் அதிமுக போட்டியிடவில்லை. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் வாக்குச்சாவடியைக் கைப்பற்றும் கலாச்சாரத்தை கொண்டு வந்ததே அதிமுகதான். 1992-இல் பரங்கிமலை கண்டோன்மெண்ட் தேர்தலில் முதன் முறையாக வாக்குச்சாவடியைக் கைப்பற்றும் முறையை அறிமுகப்படுத்தியதும் அதிமுக தான்'' எனக் குற்றச்சாட்டுகளை அடுக்கி இருந்தார்.

இந்நிலையில் பாஜகவிற்கு உதவுவதற்காகவே அதிமுக இடைத்தேர்தலை புறக்கணித்திருப்பதாக திராவிடர் கழகம் விமர்சித்துள்ளது. இது தொடர்பாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அதிமுக இடைத்தேர்தலில் புறக்கணித்திருப்பது என்பது மறைமுகமாக பாஜகவை ஆதரிப்பதே ஆகும். இது அதிமுக கட்சியின் பலகீனத்துக்கான அறிகுறியே. அரசியல் கட்சியின் கடமையை நிறைவேற்றுவதில் இருந்து அதிமுக பின்வாங்குவது உள்நோக்கம் கொண்ட செயலாக இருக்கிறது. தேர்தல் புறக்கணிப்பால் அதிமுகவின் பொதுமதிப்பு காணாமல் போய்விடும். இது அக்கட்சிக்கான தோல்வி அச்சத்தை காட்டுகிறது. தொண்டர்கள் மட்டுமல்ல பொதுமக்கள், வாக்காளர்கள் மத்தியில் அதிமுகவுக்கு இருப்பதாக கூறப்படும் பொதுமதிப்பு இழக்கும் நிலை உருவாகும்.

 'Let's write it down today; That's the fate of AIADMK'- K. Veeramani review

தேர்தலில் நிற்பதில்லை என்ற முடிவுக்கு அதிமுக சொல்லும் காரணங்கள் பொது அறிவு பொருத்தமானதாக இல்லை. ஆம்புலன்ஸை பணம் கடத்த பயன்படுத்தியவர்கள் அதிமுகவினர் என்பதை நாடறியும். மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணியை முறித்து இருந்தாலும் பிரச்சாரத்தில் மோடியை அதிமுக தலைவர்கள் விமர்சிக்கவில்லை. மராட்டியத்தில் சிவசேனாவுக்கு ஏற்பட்ட கதிதான் அதிமுகவிற்கும் ஏற்படும் என்பதை இன்றே எழுதி வைத்துவிடலாம். பாஜக கூட்டணியில் சேர்ந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட பாமக கடும் தோல்வியைச் சந்தித்துள்ளது. பாமக மீது தமிழ்நாட்டு மக்களின் நம்பகத்தன்மை எப்படி இருக்கும்? பாமகவின் எந்தப் பிரச்சாரமும் இனி எடுபடாது. விக்கிரவாண்டி தேர்தலில் திமுக ஆட்சியின் மக்கள் வளர்ச்சி திட்டங்கள் அமோக வெற்றியைப் பெற்று தரும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

'திமுக ஆட்சியில் மக்கள் மனங்களில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடுகிறது'-கி.வீரமணி வாழ்த்து

Published on 07/05/2024 | Edited on 07/05/2024
'During DMK rule, people's hearts are filled with happiness' - K. Veeramani wishes

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்து  4 ஆவது ஆண்டில் இன்று (07.05.2024) அடியெடுத்து வைக்கிறார். இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “வணக்கம். மக்களின் நம்பிக்கையையும், நல் ஆதரவையும் பெற்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றேன்.  3 ஆண்டுகள் நிறைவடைந்து 4வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிற நாள் மே 7.  இந்த 3 ஆண்டு காலத்தில் நான் செய்து கொடுத்த சாதனைகள், திட்டங்கள், நன்மைகள் என்ன என்று தினம் தோறும் மக்கள் முகங்களில் இருக்கும் மகிழ்ச்சியே சாட்சி. திராவிட மாடல் அரசு செய்து கொடுத்த திட்டங்களை நான் சொல்வதை விட, பயன் அடைந்த மக்கள் சொல்வதுதான் உண்மையான பாராட்டு. 3 ஆண்டு கால ஆட்சியில் ஸ்டாலின் என்றால் செயல், செயல் என நிரூபித்துக் காட்டியிருக்கிறேன்”எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “இது சொல்லாட்சி அல்ல; செயலாட்சி!. மக்களின் நன்றி கலந்த வாழ்த்தும், புன்னகை அரும்பும் முகங்களும்தான் இன்னும் இன்னும் உழைக்கத் தூண்டுகிறது!. நம்பிக்கையோடு முன் செல்கிறேன். பெருமையோடு சொல்கிறேன். "தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

'During DMK rule, people's hearts are filled with happiness' - K. Veeramani wishes

திமுகவின் கூட்டணி மற்றும் தோழமை கட்சிகள் திமுக அரசு நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதற்கு தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றன. இந்நிலையில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தன்னுடைய வாழ்த்துச் செய்தியை அறிக்கை மூலம் வெளியிட்டுள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்த மூன்றாண்டு திமுக ஆட்சியில் மக்கள் மனங்களில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடுகிறது. பல்வேறு செயல் திட்டங்களால் திமுக அரசு தனது சாதனைகளைத் தொடர்ந்து செய்து வருகிறது. 27 தொழிற்சாலைகளை திறந்து வைத்து 74,757 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 15 லட்சம் மகளிர் மாதந்தோறும் 1000 ரூபாய் பெறுகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலின் மூன்று ஆண்டுகளாக படைத்து வரும் சாதனைகள் தமிழ்நாட்டு மக்களால் பாராட்டப்படுகின்றன. முதல்வரின் திட்டங்களை அறிந்து வியந்து மற்ற மாநிலங்களும் அதை செயல்படுத்திட ஆர்வம் காட்டி வருகின்றன' எனத் தெரிவித்துள்ளார்.