ravi vaiko.jpg

Advertisment

போராடி வெற்றி பெறவேண்டுமே தவிர, தற்கொலை பிரச்சினைக்குத் தீர்வு அல்ல என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தீக்குளித்த ம.தி.மு.க. தோழர் சிவகாசி இரவி இன்று விடியற்காலை உயிரிழந்தார் என்ற தகவல் அறிந்து வருந்துகிறோம்.

தோழர்களின் உணர்வு பாராட்டத்தக்கது என்றாலும், அதீத உணர்ச்சிவயப்பட்டு இதுபோன்ற தற்கொலையில் ஈடுபடுவது வரவேற்கத்தக்கதல்ல.

Advertisment

தோழர்கள் இதனைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். போராடி வெற்றி பெறவேண்டுமே தவிர, தற்கொலை பிரச்சினைக்குத் தீர்வு அல்ல. இவ்வாறு கூறியுள்ளார்.