Advertisment

மறைந்த எழுத்தாளர் கி.ரா.வுக்கு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!

ர

பிரபல எழுத்தாளர் கி.ரா. என்கிற கி. ராஜநாராயணன் (வயது 99) வயது மூப்பு காரணமாக நேற்று (18.05.2021) காலமானார். அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், எழுத்தாளர்கள், நடிகர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துவருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக, கி. ராஜநாராயணன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “சாகித்ய அகாடமி விருதுபெற்ற தமிழ் இலக்கியத்தின் பேராளுமையாய்ப் பெருவாழ்வு வாழ்ந்த கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி.ரா.வின் புகழுக்குப் பெருமைச் சேர்க்கும் வகையில், அவரது இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும்” எனத் தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் அவரது சொந்த ஊரான கோவில்பட்டியில் முழு அரசு மரியாதையுடன் கி.ராவின் இறுதிச் சடங்கு இன்று நடைபெற இருக்கிறது.

Advertisment
funeral writer
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe