Skip to main content

குடிமராமத்து பெயரில் மோசடி, கண்துடைப்பு... -மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

Published on 27/06/2020 | Edited on 27/06/2020

 

K. Balakrishnan  Marxist Secretary of State

 

விவசாய விலை பொருள்களுக்கு நியாயமான விலை கேட்டு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி, அகில இந்திய விவசாய சங்கம் சார்பில் நாடு முழுவதும் குடியரசு தலைவருக்கு இ-மெயில் அனுப்பும் இயக்கம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரும், அகில இந்திய விவசாய சங்கத்தின் துணைத் தலைவர் கே.பாலகிருஷ்ணன் இ-மெயில் அனுப்பும் இயக்கத்தினை சனிக்கிழமையன்று தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கரோனா என்ற கொடிய நோயை தடுப்பதை விட்டுவிட்டு மத்திய அரசு விவசாயிகள் மீதும், பொதுமக்கள் மீதும் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றது. நேற்று மத்திய அரசு ஒரு அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது. இதன்படி மாநில அதிகாரத்திற்கு உட்பட்டு இருக்கும் கூட்டுறவு வங்கிகள் இனி மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் செயல்படும் என சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. அது ஏன் என்றால், அதிலுள்ள டெபாசிட் தொகை  ரூ4.75லட்சம் கோடியை அவர்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து அவர்களுக்கு தேவையான செலவுகளை செய்வதற்கு இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளனர்.

அதேபோல இந்தியாவில் உள்ள கனிமவள சுரங்கங்களை தனியாருக்கு தாரை வார்க்க அவசர சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மத்திய அரசு மக்களைப் பற்றி கவலைப்படாமல் அவர்களுக்கு என்ன தேவையோ அதை இந்த கரோனா ஊரடங்கு காலத்தில் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.  மாநில அரசும் நோய் தொற்றை கட்டுப்படுத்திகொண்டு இருக்கிறோம் என்கிறது. ஆனால் நோயை கட்டுப்படுத்தியது மாதிரி தெரியவில்லை.

சென்னையில் மட்டும் இருந்த நோயை தமிழ்நாடு முழுவதும் பரப்பிவிட்டதுதான் இவர்கள் நோயை கட்டுப்படுத்தியுள்ளதாக தெரிகிறது. கேரளாவை போல் பாரம்பரிய மருத்துவத்தை இந்த நோய்க்கு பயன்படுத்த வேண்டும். இது நல்ல பலன்களை கொடுப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதற்கு முன்பு டெங்கு காய்ச்சலுக்கு ஜெயலலிதா இருந்தபோது அரசு நிலவேம்பு கஷாயத்தை அருந்துமாறு கூறியது. அதில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதை உறுதி செய்யப்பட்டது. தற்போது ஆயுர்வேத மருந்து கண்டுபிடித்தவர்களை சிறையில் தள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

மேட்டூர் அணை திறந்து தண்ணீர் காவிரி டெல்டா பகுதிக்கு வருகின்றது. முதலமைச்சரோ குடிமராமத்து பணிகளை  ரூ 400 கோடிக்கு செய்து உள்ளதாக கூறுகிறார். இது கண்துடைப்பாக உள்ளது.  ஆனால் எங்குமே பணி முழுமை அடையவில்லை குடிமராமத்து என்ற பெயரில் மோசடி தான் நடைபெறுகின்றது என்று குற்றம் சாட்டினார்.

மேலும் வைரஸ் தொற்று உள்ளிட்ட  அனைத்து பிரச்சனைகளுக்கும் அகில இந்திய அளவில் அனைத்து மாநிலத்திலும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்கிறார்கள். தமிழகத்தில் நோய் தொற்று குறித்து அனைத்து கட்சி கூட்டம் தேவையில்லை என்று முதல்வர் கூறுகிறார். ஏன் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கண்டு  பயப்படுகிறார் என்று தெரியவில்லை. கூட்டத்தில் எதிர் கட்சிகள் கொடுக்கும் ஆலாசனையை பரிசீலனை செய்தாலே அனைத்து பிரச்சனையும் சரியாகும் என கூறினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் மாதவன், சிபிஎம் நகர செயலாளர் ராஜா, கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் வாஞ்சிநாதன், கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகி ஆதிமூலம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இனியாவது ரிப்பன் வெட்டுங்கள் ஏனென்றால் ஆட்சி சீக்கிரம் போகப் போகிறது'-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று  வருகிறது. இந்நிலையில் சேலத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''பிரம்மாண்டமான கட்டிடத்தை கட்டி கொடுத்திருக்கிறோம். கட்டி 3 வருடம் ஆகிறது. 1200 கோடியில் கட்டிக் கொடுத்திருக்கிறோம். ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா என பல கட்டிடங்களை கட்டி வைத்திருக்கிறோம். ஆனால் ஒற்றைச் செங்கலை தூக்கிக்கொண்டு ஊர் ஊராக போகிறீர்களே உதயநிதி ஸ்டாலின் பல லட்சம் செங்கலில் கட்டி இருக்கிறோம் ஏன் அதை திறக்க மாட்டேன் என்கிறீர்கள்.

அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடம் என்று இன்றுவரை ரிப்பன் வெட்டுவதற்கு உங்களால் முடியவில்லை. மூன்று வருடம் ஆகிறது. இனியாவது ரிப்பன் வெட்டுங்கள் ஏனென்றால் ஆட்சி சீக்கிரம் போகப் போகிறது. என்ன கொடுமை பாருங்கள் நிறைவேற திட்டத்தை செங்கல்லை தூக்கிக்கொண்டு விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் கட்டிமுடித்த திட்டத்தை திறக்க முடியாத ஒரே அரசு திமுக அரசு. இந்த திட்டம் கொண்டுவரக் கூடாது என்று பார்க்கிறார்கள்.

இது ஆசியாவிலேயே மிகப்பெரிய திட்டம். கால்நடை பூங்கா திட்டம் முழுக்க முழுக்க விவசாயிகளுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம். அமெரிக்கா செல்லும் பொழுது அங்கு ஒரு பால் பண்ணைக்கு சென்றேன். அங்கு ஒரு பசு ஒரு நாளைக்கு 65 லிட்டர் பால் கறக்கிறது. அந்த பசு போல நம்முடைய மாநில சீதோசன நிலைக்குத் தக்கவாறு கலப்பின பசுக்களை உருவாக்கி விவசாயிகள் கொடுக்க வேண்டும். 40 லிட்டர் பாலை ஒரு நாளைக்கு கறந்து அவர்கள் வருமான பெருக வேண்டும் என்பதற்காக இந்த அற்புதமான திட்டத்தை கொண்டு வந்தேன். அதில் கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் உள்ளது . அதன் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டு கிடைக்கும் கால்நடைகளை விவசாயிகளுக்கு கொடுத்து இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் குறிக்கோள். இன்று நாம் ஒரு ஆடு வளர்த்தால் 20 கிலோ தான் கிடைக்கும். ஆனால் கலப்பின ஆடு வளர்த்தால் 40 கிலோ கிடைக்கும். இந்த திட்டத்தை முடக்கி வைத்த அரசாங்கம் திமுக அரசாங்கம். கால்நடை பூங்கா வந்திருந்தால் இந்தப் பகுதி பெரிய வளர்ச்சி அடைந்திருக்கும். உலக அளவில் நம்முடைய சேலம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி பிரசித்தி பெற்றிருக்கும்'' என்றார்.

Next Story

'அம்பேத்கர் பிறந்தநாளில் தேர்தல் அறிக்கை வெளியிடுவது பாஜகவின் ஏமாற்று வேலை'-கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'Issuing election manifesto on Ambedkar's birthday is a scam by BJP' K. Balakrishnan review



கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அம்பேத்கர் பிறந்தநாளில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்பரம் நகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  பின்னர் அம்பேத்கர் புகழ் ஓங்குக என கோஷங்களை எழுப்பினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் கே. பாலகிருஷ்ணன் பேசுகையில்,'' காலங்காலமாக இந்தியாவில் நிலவிய சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து அனைவரும் சமம் என்கிற ஒரு நிலையை உருவாக்க தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட மகத்தான தலைவர் அம்பேத்கர். மனிதர்களுக்குள்ளே ஏற்றத்தாழ்வுகள் இருக்கக் கூடாது என்கிற உயர்ந்த லட்சியத்தை இந்தியாவில் நடைமுறைப்படுத்த எந்த லட்சியத்திற்காக பாடுபட்டாரோ அதனை நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.

அரசியல் சாசனத்தையே அப்புறப்படுத்தி விட்டு வர்ணாசிரம தர்மத்தை அரியணை ஏற்றுவதற்கு துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான கூட்டணி இன்று பகிரங்கமாக வேலை செய்து வருகிறார்கள். அதை வீழ்த்துகிற மகத்தான கூட்டணியாக இந்தியா கூட்டணி அமைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் வட இந்தியாவில் உள்ள தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெற்று மத்தியிலே ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படும் என உறுதியாகி உள்ளது.

தமிழ்நாட்டில்  பாட்டாளி மக்கள் கட்சி கையை முறுக்கி கடைசி நேரத்தில் கையெழுத்து வாங்கி உடன்பாட்டை ஏற்படுத்தி உள்ளனர். பாட்டாளி மக்கள் கட்சியினரை பார்த்து நான் கேட்பதெல்லாம் இட ஒதுக்கீடு என்ற கொள்கையே இந்த நாட்டில் இருக்கக் கூடாது. சாதி ஏற்றத்தாழ்வுகள் பிரம்மாவால் படைக்கப்பட்டது. வருணாசிர தத்துவம் தான் இந்த ஆட்சியினுடைய தத்துவம் என்று சொல்லக்கூடிய ஆர்.எஸ்.எஸ்,பா.ஜ.கவோடு இட ஒதுக்கீட்டிற்காக போராடும் நீங்கள் சமூக நீதியை வற்புறுத்துவதற்காக போராடும் நீங்கள் தேர்தல் உறவு கொண்டது இயற்கை நியதிகளுக்கே விரோதமானது இல்லையா?

அம்பேத்கருடைய கொள்கைகளுக்கு சாவுமணி அடிக்கிறவர்கள், சாதிய ஏற்றத்தாழ்வுகளை தூக்கி பிடிக்கிறவர்கள், வர்ணாசிரம தர்மம் தான் எங்கள் லட்சியம் என்பவர்கள், வர்ணாசிரம தர்மம் தான் இந்தியாவின் அரசியல் சாசனமாக மாற்ற வேண்டும் என அறிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமை தாங்கக் கூடிய பா.ஜ.க அம்பேத்கர் பிறந்த தினத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடுவதாக கூறுவது நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கான கபட நாடகம். சிதம்பரத்தில் திருமாவளவன் மகத்தான வெற்றி பெறுவார்'' எனக் கூறினார்.

இவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாநில துணைத்லைவர் மூசா, மாவட்டக் குழு உறுப்பினர் ஜெயச்சித்ரா, நகர்மன்ற துணைத்தலைவர் முத்துக்குமரன், ஒன்றிய செயலாளர்கள் மனோகர்,செல்லையா, விசிக முன்னாள் மாவட்டச் செயலாளர் பால.அறவாழி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.