Skip to main content

காவல்நிலையத்தில் கொலை செய்யப்பட்ட வினோத் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றவேண்டும் -கே.பாலகிருஷ்ணன்

Published on 31/07/2019 | Edited on 31/07/2019


 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற வினோத் காவல்நிலையத்தில் கொலை செய்யப்பட்டதை கண்டித்து காட்டுமன்னார்கோயில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காட்டுமன்னார்கோவில் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டசெயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன்.

 

k

 

பாலகிருஷ்ணன் பேசியபோது,   ‘’தமிழகத்தில் பொதுவாக அதிமுகவின் எடப்பாடி ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து படுகொலைகளும், கொள்ளைகளும் அன்றாட நிகழ்ச்சிகளாக மாறி வரும் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.  ஒருபக்கம் ஆணவ கொலைகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது சம்பந்தமாக உயர்நீதிமன்றத்தில் ஆணவக் கொலைகளை தடுப்பதற்கு அரசு என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று கேட்டு கேள்வி எழுப்பியுள்ளனர்.  இதற்காக காவல்துறை சார்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதையெல்லாம் பார்த்த பிறகு நீதிபதிகள் ஆணவக்கொலைகளைத் தடுப்பதற்கு உச்ச நீதிமன்றம், உயர் நீதி மன்றங்கள் எல்லாம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தெரிவித்தால் கூட தமிழக அரசால் சொல்லக்கூடிய நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை என்று நீதிபதிகள் பகிங்கரமாக விமர்சித்துள்ளனர்.

 

இந்தநிலையில் காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்கிறோம் நடவடிக்கை எடுக்கிறோம் என்ற பெயரில் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை கைதிகளை சித்திரவதை செய்வது இப்படி படுகொலைகள் நடப்பது தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.   அதேபோன்றுதான் கடந்த மாதம் 11ஆம் தேதி காட்டுமன்னார்கோயில் பகுதியைச் சேர்ந்த வினோத் என்கிற இளைஞரை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.  மறுநாள் காலை காவல் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

இதில் வினோத்  தற்கொலை செய்து கொண்டார் என்று காவல்துறை சொல்வது  நம்பிக்கை தருவதாக இல்லை. இதில் வினோத்தை காவல்துறையினர் பலமாக தாக்கியதில் அவர் மரணம் அடைந்துள்ளதாக தெரிகிறது. வினோத் காவல் நிலைய லாக்கப்பில் தற்கொலை செய்து கொண்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி கட்சியின் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு புகார் கொடுத்தும் கூட சிபிசிஐடி போலீசாருக்கு விசாரணை நடத்த உத்தரவு விடவில்லை.

 

மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் கேட்க விரும்புவது என்னவென்றால் வினோத் தற்கொலைதான் செய்து கொண்டார்.  மற்றபடி காவல்துறையினர் அவர் மீது எந்த தாக்குதல்களும் நடத்தவில்லை என்று அவர் நினைத்தால் சிபிசிஐடிக்கு வழக்கை மாற்றி விட வேண்டியதுதானே. சிபிசிஐடி விசாரணைக்கு பிறகு தற்கொலை என்று முடிவு எடுத்தால் நாங்கள் வரவேற்கத் தயார்.

 
 இதுபோல் கடலூர் மாவட்டத்தில் எத்தனையோ வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்ததால் காவல்நிலையத்தில் கொலைசெய்யப்பட்டனர் என கண்டுபிடித்து  சம்பந்தபட்ட காவல்துறையினருக்கு தண்டனையும் வாங்கிகொடுக்கப்பட்டுள்ளது. எனவே  சிபிசிஐடி கம்யூனிஸ்ட் கட்சிக்கு சொந்தமான போலீசா?  அதுவும் தமிழக அரசு போலீஸ் தானே ஆகவே காவல் நிலையத்தில் நடந்த இந்த படுகொலையை அதே காவல்துறையினர் விசாரித்தால் நியாயம் கிடைக்காது ஆகையால் உடனடியாக வினோத் கொலை வழக்கை  சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு உத்திரவிடவேண்டும். அவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை, இழப்பீடு வழங்கவேண்டும்.  இதனை செய்யவில்லையென்றால் சிபிசிஐடி விசாரணை கேட்டு நீதிமன்ற கதவை தட்டவும் மார்க்சிஸ்ட் கட்சி அஞ்சாது என்று பேசினார். 

 இதனைதொடர்ந்து மார்க்சிஸட் கட்சியின் மாவட்ட செயலாளர் டி.ஆறுமுகம், மாநிலக்குழு உறுப்பினர்கள் மூசா, கோ.மாதவன், மாவட்டச்செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன்,அசோகன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் வாஞ்சிநாதன், ராஜா, மூர்த்தி உள்ளிட்டவர்கள் போராட்டத்தின் நோக்கம் குறித்து பேசினார்கள். கூட்டத்தில் பாதிக்கப்பட்ட வினோத் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கட்சியினர் என திறளாக கலந்துகொண்டனர்.

 

இதனைதொடர்ந்து கூட்டத்தில் கலந்துகொண்ட வினோத் குடும்பத்தினருக்கு கே.பாலகிருஷ்ணன் ஆறுதல் கூறினார்.   
 

சார்ந்த செய்திகள்

Next Story

“கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும்” - கே. பாலகிருஷ்ணன்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
State Secretary of the Communist Party of India in Chidambaram K. Balakrishnan voted

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் காலையில் இருந்து பொதுமக்கள் அவர்களது வாக்கினை ஆர்வமுடன் செலுத்தி வருகின்றனர். இதில் சிதம்பரம் மானா சந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அவரது மனைவி கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஜான்சி ராணியுடன் சென்று வாக்கினை பதிவு செய்தார்.

அப்போது அவர் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கடந்த 2019 தேர்தலை விட இந்த தேர்தலில் தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெறுவார்கள்.  தமிழகத்தில் உள்ள வாக்காளர்கள் மத்தியில் ஒரு ஆட்சி மாற்றம் வேண்டும் என தெளிவாக உள்ளனர். மோடி வெற்றி பெற முடியாது என்பதை பல ஆய்வுகள் கூறுகிறது.

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்தியா கூட்டணி தலைவர்கள் மேற்கொண்ட பிரச்சாரம் பொதுமக்களின் வாழ்வாதாரம், அரசியல் பிரச்சனைகளை முன்னிறுத்தி இருந்தது. கூட்டாட்சி தத்துவத்தையும் இந்தியாவின் பன்முக தன்மையை பாதுகாப்பது. விலைவாசி உயர்வை தடுப்பது. வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்க வேண்டும் என்ற மக்களின் அடிப்படையிலான பிரச்சனைகளை வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளோம். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்  எனக்கூறினார்.

Next Story

'அம்பேத்கர் பிறந்தநாளில் தேர்தல் அறிக்கை வெளியிடுவது பாஜகவின் ஏமாற்று வேலை'-கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'Issuing election manifesto on Ambedkar's birthday is a scam by BJP' K. Balakrishnan review



கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அம்பேத்கர் பிறந்தநாளில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்பரம் நகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  பின்னர் அம்பேத்கர் புகழ் ஓங்குக என கோஷங்களை எழுப்பினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் கே. பாலகிருஷ்ணன் பேசுகையில்,'' காலங்காலமாக இந்தியாவில் நிலவிய சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து அனைவரும் சமம் என்கிற ஒரு நிலையை உருவாக்க தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட மகத்தான தலைவர் அம்பேத்கர். மனிதர்களுக்குள்ளே ஏற்றத்தாழ்வுகள் இருக்கக் கூடாது என்கிற உயர்ந்த லட்சியத்தை இந்தியாவில் நடைமுறைப்படுத்த எந்த லட்சியத்திற்காக பாடுபட்டாரோ அதனை நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.

அரசியல் சாசனத்தையே அப்புறப்படுத்தி விட்டு வர்ணாசிரம தர்மத்தை அரியணை ஏற்றுவதற்கு துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான கூட்டணி இன்று பகிரங்கமாக வேலை செய்து வருகிறார்கள். அதை வீழ்த்துகிற மகத்தான கூட்டணியாக இந்தியா கூட்டணி அமைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் வட இந்தியாவில் உள்ள தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெற்று மத்தியிலே ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படும் என உறுதியாகி உள்ளது.

தமிழ்நாட்டில்  பாட்டாளி மக்கள் கட்சி கையை முறுக்கி கடைசி நேரத்தில் கையெழுத்து வாங்கி உடன்பாட்டை ஏற்படுத்தி உள்ளனர். பாட்டாளி மக்கள் கட்சியினரை பார்த்து நான் கேட்பதெல்லாம் இட ஒதுக்கீடு என்ற கொள்கையே இந்த நாட்டில் இருக்கக் கூடாது. சாதி ஏற்றத்தாழ்வுகள் பிரம்மாவால் படைக்கப்பட்டது. வருணாசிர தத்துவம் தான் இந்த ஆட்சியினுடைய தத்துவம் என்று சொல்லக்கூடிய ஆர்.எஸ்.எஸ்,பா.ஜ.கவோடு இட ஒதுக்கீட்டிற்காக போராடும் நீங்கள் சமூக நீதியை வற்புறுத்துவதற்காக போராடும் நீங்கள் தேர்தல் உறவு கொண்டது இயற்கை நியதிகளுக்கே விரோதமானது இல்லையா?

அம்பேத்கருடைய கொள்கைகளுக்கு சாவுமணி அடிக்கிறவர்கள், சாதிய ஏற்றத்தாழ்வுகளை தூக்கி பிடிக்கிறவர்கள், வர்ணாசிரம தர்மம் தான் எங்கள் லட்சியம் என்பவர்கள், வர்ணாசிரம தர்மம் தான் இந்தியாவின் அரசியல் சாசனமாக மாற்ற வேண்டும் என அறிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமை தாங்கக் கூடிய பா.ஜ.க அம்பேத்கர் பிறந்த தினத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடுவதாக கூறுவது நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கான கபட நாடகம். சிதம்பரத்தில் திருமாவளவன் மகத்தான வெற்றி பெறுவார்'' எனக் கூறினார்.

இவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாநில துணைத்லைவர் மூசா, மாவட்டக் குழு உறுப்பினர் ஜெயச்சித்ரா, நகர்மன்ற துணைத்தலைவர் முத்துக்குமரன், ஒன்றிய செயலாளர்கள் மனோகர்,செல்லையா, விசிக முன்னாள் மாவட்டச் செயலாளர் பால.அறவாழி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.