Advertisment

“70 ஆண்டு கால வரலாற்றை அழித்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி” - ஜோதிமணி வேதனை

 Jyotimani said Edappadi Palanichamy has destroyed 70 years of history

கரூர் மாவட்டம் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில், 70 ஆண்டுகளுக்கு முன்பாக காந்தி சிலையானது அமைக்கப்பட்டு தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வந்தது. அப்படி 70 ஆண்டு கால வரலாற்றைப் பதிவுசெய்துகொண்டிருந்த காந்திசிலை, இரவோடு இரவாக அகற்றப்பட்டது. அகற்றப்பட்ட காந்தி சிலையை, முதல்வர் வந்து திறந்து வைக்க உள்ளார் என்ற ஒரே காரணத்திற்காக புதிய காந்தி சிலையை அந்த இடத்தில் நிறுவியுள்ளனர்.

Advertisment

அதிலும் இந்த சிலை வடிவமைப்பு ஒரு முறையான டெண்டர் மூலம் வழங்காமல் தரமற்ற சிலையை தற்போது நிறுவியுள்ளது வேதனைக்குரியது என்று குற்றம் சாட்டியள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி. மேலும் ஜோதிமணி இதுகுறித்து புகார் தெரிவித்துள்ளார்.

Advertisment

jothimani congress
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe