Advertisment

“நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கூட்டத்தொடரில் இந்தியா கூட்டணி வலியுறுத்தும்” - ஜோதிமணி எம்.பி

Jyothimani says We will strongly a series of meetings to cancel the NEET exam

கரூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு ஜோதிமணி தேர்தலில் வெற்றி பெற்றார். இந்த நிலையில் எம்.பி ஜோதிமணி கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் இன்று கட்சி நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் வெற்றிக்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து, பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தார்.

Advertisment

அப்போது பேசிய ஜோதிமணி, “கடந்த தேர்தலில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பாக களப்பணியாற்றி நமக்கு வெற்றியைத் தேடித் தந்தார். இந்தத்தேர்தலில் அவர் பங்கேற்க முடியவில்லை என்றாலும், கரூர் திமுகவை சிறப்பாக கட்டமைத்து, அவர் ஏற்படுத்திய படை என்று சொல்லும் அளவிற்கு கரூர் திமுகவினர் முன்னின்று சிறப்பாக செயல்பட்டு இரண்டாவது முறையாக நமக்கு வெற்றியைத்தேடி தந்துள்ளனர். அதற்காக செந்தில் பாலாஜிக்கு எனது மனமார்ந்த நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறேன். அவரை நேரில் சந்தித்து நன்றி சொல்ல முடியாத சூழல் இருந்தாலும், அவருக்கு நன்றி தெரிவித்தார்.

Advertisment

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிமணி, “நீட் தேர்வு விவகாரம் தற்போது அனைத்து மாநிலங்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களும் தற்போது எதிர்க்க துவங்கியுள்ளனர். தமிழக முதல்வர் நீட் விவகாரத்தில் சிறப்பாக செயல்பட்டு எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார். அது தொடர்பான தகவல்களைப் பல்வேறு மொழிகளில் மொழிப் பெயர்ப்பு செய்யப்பட்டு மற்ற மாநிலங்களுக்கு வழங்கி வருகிறார். நீட் தேர்வை நாடு முழுவதும் ரத்து செய்ய வேண்டும் என வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் வலிமையாக இந்தியா கூட்டணி வலியுறுத்தும்.

மத்திய மோடி ஆட்சியில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டு வருகிறது, அதில் குறிப்பாக கரூர் நாடாளுமன்றத்தொகுதியும் புறக்கணிக்கப்படுகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கரூரை சேர்க்காமல் புறக்கணித்துள்ளனர், இதே போன்று மதுரையிலிருந்து பெங்களூர் செல்லும் வந்தே பாரத் ரயிலையும் கரூர் ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசுவேன். ஆளும் கட்சிக்கு இணையாக எதிர்கட்சியிலும் எம்பிகள் இருக்கின்றனர். நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அவை எதிரொலிக்கும் என்றார்.

jothimani
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe