nn

திருச்சியில் அமைச்சர் கே.என். நேருவின் ஆதரவாளர்களால் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவின் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அண்மையில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் திமுக தலைமையின் அறிவுறுத்தலை தொடர்ந்து இருவரும் சந்தித்து பரஸ்பரம் பேசிக் கொண்டனர்.

Advertisment

இந்த நிலையில் விருதுநகர் மேற்கு மாவட்டம்- ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதி வத்திராயிருப்பு வடக்கு - தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பாகநடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பேசியபோது “ஈரோட்டில் ஆளும்கட்சியின் அத்துமீறலால் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார். ஈரோட்டில் அதிமுக வேட்பாளர் 45 ஆயிரம் வாக்குகள் பெற்றதேமிகப்பெரிய வெற்றிதான். அதிமுகவிற்கு வாக்களிப்பதை யாராலும் தடுக்க முடியாது என்பதற்கு ஈரோடு இடைத் தேர்தல் ஒரு எடுத்துக்காட்டு. மதுரை ஏர்போர்ட் சம்பவத்தில் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்த திமுக அரசு,திருச்சி சிவா கார் தாக்கப்பட்ட சம்பவத்தில்அமைச்சர் கே.என்.நேரு மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை?” எனக் கேள்வி கேட்டார்.