Advertisment

“தமிழக அரசுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் மாநாடு அமைந்துள்ளது” -  நீதியரசர் சுப்பிரமணியன் பேச்சு

Justice Subramanian's speech at murugan conference

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அருள்மிகு தண்டாயுதபாணி கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் மற்றும் முக்கிய பிரமுகர்கள், ஆதீனங்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர். இந்த மாநாட்டில் நீதியரசர் ஆர். சுப்பிரமணியன் கலந்து கொண்டு மாநாட்டின் மலரை அமைச்சர் ஐ.பி.யிடம் பெற்று கொண்டார்.

Advertisment

அதன் பின், நீதியரசர் சுப்பிரமணியன் பேசும் போது, “கடம்பத்து தன் பரங்குன்றத்து என்ற குறிப்பிடுதல் மூலம் திருப்பரங்குன்றத்தில் முருக பெருமான் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார் என்ற குறிப்பு உள்ளது. இவ்வாறு அனைத்து பண்டைய தமிழ் நூல்களிலும் முருகனைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. முத்தமிழும், முருகனும் என்றும் பிரிக்க முடியாதவை. அருணகிரிநாதர் புகழிலே கிட்டத்தட்ட 90 பாடல்களில் இந்த பழனி முருகனைப் பற்றி பாடி இருக்கிறார். அதில், 110வது பாடல் திருப்புகலில் அருணகிரிநாதர் பாடுகிறார், ‘அவனிதனிலே பிறந்து, மதலை எனவே தவழ்ந்து, அழகு பெறவே நடந்து, இளைஞனாய் அழகு மலையே விகழ்ந்து, முதலை மொழியை புகழ்ந்து, அது விதம் அதாய் வளர்ந்து, பதினாறாய் சிவகலைகள் ஆகமங்கள் மிகவும் அரியோர் அன்பு திருவடிகளை நினைத்து துதியாமல் இதுவரைக்கும்’, என அவரை பற்றி சொல்லியிருக்கிறார்.

Advertisment

பெரிய வயல்கள் ஆசை மிஞ்சி வெகு கவலையாய் உழன்று சிறிதும் அடியேனை ஒன்றன அடி சேராய் இதுவரைக்கும் அவரை பற்றி சொல்லியிருக்கிறார். அந்த மாதிரியெல்லாம் இருக்கேன் என்னை விட்டு போ என்று சொல்லியிருக்கிறார். பின்னாடி ‘மவுன உபதேச சம்பு வடியருகு தும்பை மணி முடியின் மீது அணிந்த மகாதேவன் மனம் மகிழவே அலைந்து ஒருபுறம் அதாக வந்து மலைமகள் குமராதுங்கவடிவேலா பவனி வரவே உகந்த மயிலே, மயிலின் விசையை திகழ்ந்து மயில் மீது ஏறி சுற்று வதற்கு பிரியப்பட்டவரே’ என்று முருகனை சொல்லியிருக்கிறார், ‘படி அதிரவே நடந்த கடல் நீரால் பரமபதமே சரிந்த முருகன் எனவே யுகந்து பழனி மலை மேல் அமர்ந்த பெருமானே’ என முடிக்கிறார். இவ்வாறு முருகனை பற்றிய குறிப்புகள் பல தமிழ் நூல்களில் இருக்கின்றன. இவற்றை ஒரு மிகப்பெரிய ஆராய்ச்சி நடத்தி, ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்து பல தமிழ் அறிஞர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் அனைவரையும் ஒன்றிணைத்து இந்த மாநாட்டை நடத்துவது தமிழக அரசுக்கு பெருமிதம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது” என்று கூறினார்.

pazhani
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe